குறுந்தொகையில் தனி உரையாடல்
முனைவர் வ.அண்ணாதுரை
Pages: 1-4
|
First Published: 05 Apr 2022
Full text
|
Abstract
|
Purchase
| References
|
Request permissions
முன்னுரை
அகப்பொருள் உலகிய வழக்கும் நாடக வழக்கும் விரவி வருவதாகப் பாடப்படுவது. குறுந்தொகையும் அவ்வாறே அமைந்துள்ளது. பேச்சு என்பது ஒரு கலை. பேராற்றல் வாய்ந்தது. முத்தொழில் புரியும் வல்லமையும் வாய்ந்தது. பேச்சில் பிறந்த கலையே உரையாடல். ஆனால் வெறும் பேச்சிலிருந்து வேறுபட்டது. உரையாடல் ஓர் உயரிய கலை. ஊலகியல் உரையாடலின் உயர் உருவாக்க வடிவமாக விளங்குவது நாடக உரையாடல். புலவர்கள் ஒரு பாட்டைக் கலைப்படைப்பாக உருவாக்குவதில் கையாளும் திறன் போற்றத்தக்கது.
இந்த முறையில் இன்னின்னார் இன்னின்னாரோடு இன்னபடிதான் பேச வேண்டும் என்ற வரையறையை உடையது சங்க அகப்பாடல் என்பர்.-(1) இந்த வரையறை வழுவாமல் பேசும் அகமாந்தர் உரையாடல் மூலம் சுவை கூட்டுகின்றனர். குறிப்பிட்ட ஒரு நேரத்து நிகழ்ச்சியை அல்லது மனநிலையை மட்டும் விளக்கும் போக்கில் இக்காட்சி அமைகின்றது என்கிறார் மு.வ.-(2) சங்கப்பாடல்கள் தற்கால ஓரங்க நாடகங்கள் என்பர் கா.அப்பாதுரை.-(3) நாடக ஒருகூற்றுப் பாடலை நாடகத் தனி உரையாடல் எனக்குறிக்கலாம். தனி உரையாடற் பாடல்களில் மாந்தர் நெஞ்சோடு நிகழ்த்தல், அஃறிணைப் பொருள்களிடம் உரைத்தல் என்ற இரண்டு நிலைகள் உடையது.
மேற்கண்ட காரணங்களில் கேட்போர் இருக்கும்போது மட்டுமே ஒருவர் பேசுதல் காண்கிறோம். இவ்வாறு ஒருவர் பேசப் பிறர் கேட்கும் நிலையில் கேட்போர் எதிர் உரை நிகழ்த்த எப்போதும் வாய்ப்பில்லை. ஆனால் கேட்போரின் மனக்குறிப்பை பேசுவோர் நன்கு உணர்வர். பேசுவோர் கேட்போர் இடையே ஒருமன இணைவு இருந்தால் தான் இந்நிலைமை ஏற்படும். பெரும்பாலும் இம்மாந்தர்கள் ஒருவரை ஒருவர் அறிந்தோராக இருப்பது ஒரு வாய்ப்பாகும். பேசுவோரின் உரை வெளிப்பாடும் கேட்போரின் உணர்ச்சி வெளிப்பாடாகிய மெய்ப்பாடும் இணைந்து இங்கு நாடகத்தன்மையை உருவாக்குகின்றன.
அடிக்குறிப்புகள்:
1. ந.சுப்புரெட்டியார்இ தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கைஇ இரண்டாம் பதிப்புஇ (சென்னை 1981) பக்-46
2. மு.வரதராசன்இ குறுந்தொகைச் செல்வம்இ இரண்டாம் பதிப்புஇ சென்னை 1958இ பக்-6
3. கா.அப்பாதுரைஇ சங்க இலக்கியத்தின் சால்பு தமிழ் வட்டம் முதல் ஆண்டு விழா மலர் சென்னை 1967 பக்-143