முன்னுரை
இயல், இசை, நாடகம் என்ற மூன்று கூறுபாடுகளையும் தன்னகத்தே அடக்கிய ‘முத்தமிழ்’ என்று தமிழ்மொழி சிறப்பிக்கப்படுகிறது.மனத்தின் வெளிப்பாடு இயல், நாவின் புலப்பாடு இசை, உடலின் செயற்பாடு நாடகம் என முத்தழிழும் மனம், மொழி, செயற்பாடுகளோடு நெருங்கிய தொடர்புடையன. அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்ட மற்றும் நடிக்கப்பட்ட நாடகங்கள் மையப்படுத்திய பொருண்மைகளை எல்லாம் புறந்தள்ளி நடைமுறை சமுதாயப் பிரச்சனைகளை மையமிட்ட நாடகங்களைப் படைத்தார் அறிஞர் அண்ணா ஆண்டவனையும் அரசனையும் மையமாகக் கொண்டு நடிக்கப்பட்டு வந்த நாடக உலகில் சமுதாயத்தில் உள்ள அநீதி, நேர்மையின்மை, கொடுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டி நாடகங்களை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. இதனால் புதியவாசகர்கள் பலரை அவருக்குத் தேடிதந்தது. அண்ணாவின் நாடகங்களில் நீதிதேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி முதலியவைகளில் உள்ள சமுதாயபிரச்சனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முடிவுரை:
மனிதநேயம், கருணை உள்ளம், பேரறிவு, பேச்சாற்றல், நாகரீகம், பேச்சாற்றல், நாகரீகம் முக்கியமாக பொறாமையின்மை இவை அனைத்திற்கும் ஒரு மனித உருவம் கொடுத்தால் அந்த உருவம் பேரறிஞர் அண்ணா. இன்று வரை நாடக உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்று அவருக்கு நிகர் அவரே என இன்று வரை மக்கள் மத்தியில் வாழ்ந்துவருகிறார்.
துணைநூற்பட்டியல்:
அண்ணா, 1990, நீதி தேவன் மயக்கம், சென்னை, திராவிடர்கழக
வெளியீடு
அண்ணா, 1990, கம்பரசம், சென்னை, திராவிடர் கழக வெளியீடு
அண்ணா, 2010, கௌரா பதிப்பகம்,சென்னை
அண்ணா, 2010, காயத்ரி பப்ளிகேசன்ஸ், சென்னை