Emperor Journal of Classical Tamil Studies is a double-blind peer-reviewed refereed monthly journal that publishes articles in the field of Tamil Studies. The goal of the journal is to disseminate knowledge, which ensures good practice of professionals, and its focal point is on research and reflections relevant to academicians and researchers in the field of Tamil Studies. The core of the vision of EJCTS is to disseminate new knowledge for the benefit of all, ranging from academic research and professional communities to industry professionals in a range of topics in Tamil Studies. It also provides a place for high-calibre researchers, practitioners, and PhD students to present ongoing research and development in these areas.
Emperor Journal of Classical Tamil Studies is a double-blind peer-reviewed refereed monthly journal that publishes articles in the field of Tamil Studies. The goal of the journal is to disseminate knowledge, which ensures good practice of professionals, and its focal point is on research and reflections relevant to academicians and researchers in the field of Tamil Studies. The core of the vision of EJCTS is to disseminate new knowledge for the benefit of all, ranging from academic research and professional communities to industry professionals in a range of topics in Tamil Studies. It also provides a place for high-calibre researchers, practitioners, and PhD students to present ongoing research and development in these areas.
Aim
To establish itself as a platform for exchanging ideas on new emerging trends that needs more focus and exposure and is always committed to publish articles that will strengthen our goals.
To bring out the latent research talent and the professional work done by Practitioners, Administrators, Scholars, Graduate and Post Graduate students in the field of Tamil Studies.
To be a leading source of scholarly articles and research papers through the promotion of research publication at affordable or at no cost in the long run. In another word to make research publication hassle-free for financially constrained researchers and scholars. The published article will always be open access, free under a Creative Commons License and archived for future generations.
Scope
Emperor Journal of Classical Tamil Studies is a quarterly Peer-Reviewed, Refereed, Indexed International research journal so there is a wide scope for publication. : Emperor Journal of Classical Tamil Studies is a platform for all researchers in varied subjects to publish original authoritative research papers, articles, research projects, reviews, mini-reviews, case studies, synopsis and short research communications. Authors are encouraged to submit complete unpublished and original works, which are not under review in any other journals.
சு. சந்திரகுமார்
முதுநிலை விரிவுரையாளா்நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை srckumar20@yahoo.com
ஜி. ஜெயஸ்ரீ
உதவிப்பேராசிரியர்தமிழ்த்துறை ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஏனாத்தூர், காஞ்சிபுரம் - 631561 None
முனைவர் பா.இரா.கவிதா
தமிழ்த்துறைத் தலைவர்தமிழ்த்துறை ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். kavitha30579@gmail.com
முனைவர் இரா.பிரியதர்ஷினி
உதவிப்பேராசிரியர்தமிழ்த்துறை ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். priyadarsini1983@gmail.com
வெ ரேவதி
உதவிப்பேராசிரியர்தமிழ்த்துறை ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். revathijai2517@gmail.com
முனைவர் வி.காயத்ரிபிரியதர்ஷினி
உதவிப்பேராசிரியர்தமிழ்த்துறை ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். None
முனைவர் சு.ரேணுகாதேவி
உதவிப்பேராசிரியர்தமிழ்த்துறை ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். renutrinetra@gmail.com
இரா. ஹேமலதா
உதவிப்பேராசிரியர்தமிழ்த்துறை ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். hema25051987@gmail.com
டாக்டா் எஸ். கேசவன்
மேனாள் தலைவா், இந்து நாகரிகத்துறைசிரேஷ்ட விரிவுரையாளா், கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை kesavans@esn.ac.lk
கலாநிதி வானதி பகீரதன்
முதுநிலை விரிவுரையாளர்தமிழ்த்துறை சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக் கழகம் இலங்கை vanathyp@esn.ac.lk
முனைவர்.செல்வஜோதி ராமலிங்கம்
மூத்த விரிவுரையாளர்தமிழ்த்துறை மலாயா பல்கலைக்கழகம் 50603,கோலாலம்பூர், மலேசியா selvajothi@um.edu.my

Dr.Mayakkannan Raman
M.Com., MBA(Finance) MFC., MA (Eco) MPhil., Ph.D., PGDFM., PGDCA.,NET-JRFDepartment of Commerce Sri Sankara Arts and Science College mayakkannan@sankaracollege.edu.in
Regular Issues
சங்க இலக்கியங்களில் புலவர்களின் இசை
- கலாநிதி. வானதி பகீரதன்
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க இலக்கியங்களில் பாணர், கூத்தர், விறலியர், கோடியர், கண்ணுளர், பாடினி, பொருநர் முதலானோhர் இசை, நடனக் கலைஞர்களாக அடையாளப்படுத்தப் படுகின்றனர்;;. புலவர்கள் பாட்டுப் பாடினாலும் அவர்;களை இசைக் கலைஞர்களாகக் கொள்ளும் மரபு காணப்படவில்லை. புலவர்களை இயற்றமிழ்ப் புலவர்களாக நோக்கும் போக்கே பெரும்பாலும் காணப்படுகின்றது. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இயற்றமிழ்ப் புலவர்களிற் பலர் மன்னனிடம் நேரடியாகச் சென்று அவர்களது புகழ்களைப் பாடி பரிசில்கள் பெற்றுள்ளமையை அறிய முடிவதுடன் அவர்களிற் பலர் எழுத்தறி புலவர்களாகவும் வாய்மொழிப் புலவர்களாகவும் இருந்துள்ளமையையும் அறிய முடிகின்றது. இதனை “வையகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்”(புறநானூறு 221),“வாய்மொழிப் புலவ”(பரிபாடல் 19), “வாய்மொழிக்கபிலன்..” (அகநானூறு 78), “நாநவில் புலவர்”(புறநானூறு 282) “செந்நாப் புலவர்”(புறநானூறு 107) முதலான தொடர்கள் எடுத்தியம்புகின்றன.
ஸ்ரீமதிருக்மிணிதேவி அருண்டேல் அவர்களின் நாட்டியநாடகங்கள் ஓர் பார்வை
- கலாநிதி (திருமதி) ஷர்மிளாரஞ்சித்குமார்
- செல்வி. மதுரிகிரிதரன்
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பரத நாட்டியத்தின் கலை தொடர்பான உண்மைத் தன்மையையும் விழிப்புணர்வையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டுசெல்வதற்கு முன்னர் ருக்மிணிதேவி அம்மையார் அந்தக்கலையைதாமே முதலில்கற்றுக்கொள்ள வேண்டுமென முடிவு செய்தார். அதற்கேற்றாற்போல் திறமையான அனுபவமுள்ள குருக்களிடம் கற்று தேர்ச்சிபெற்றார். சென்னையில்கலாNÑத்திராவை நிறுவிசிறந்த நடனக்கலைஞர்களையும் இசைக் கலைஞர்களையும் உருவாக்கியபின் அம்மையார்நாட்டிய நாடகங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தத்தொடங்கினார். இந்தியா வின்நடன வடிவங்களான பரதநாட்டியம் மற்றும் கதகளி போன்ற வற்றின் மூலமும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட காவியங்கள் மற்றும் புராணங்களின் லமும் குழுநடனக்கலைகளின் திறமைகளை வெளிக்கொணர ஆரம்பித்தார். அம்மையாரின் ஆசைப்படி அவரால் உருவாக்கப்பட்ட 25ற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள் ஒவ்வொன்றிற்கும் உடைகள, ஆபரணங்கள், மேடை அலங்காரங்கள், இசை பக்கவாத்தியம் போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முறையில் வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டிலிருந்தும் பிரசித்தி பெற்றகலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். மேடையில் கைவினைகள்மற்றும் மேடைவிளக்குகளுக்கான பயிற்சிகளுக்காக கலாNÑத்ர ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அம்மையார் கற்பித்தது குறிப்பிடத்தக்கது. அம்மையாரின் நாட்டிய நாடகங்கள் அனைத்தும் 1940ற்கும் 1984ற்கும் இடையில் அரங்கேற்றப்பட்டது.
மயிலேரும் இராவுத்தன் இராஜாமுகமது
- பேரா. முனைவர் செ. சிராஜூதீன்
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவினை உடையது தமிழ் மொழி. இவ்வகை இணைந்த பகுப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை. நாடகம் இறுதியில் இருந்தாலும், இயலையும் இசையையும் தன்னுள்ளே கொண்டிருப்பதால் நாடகத்தின் முதன்மையை நன்கு அறியலாம். இயலிசையால் காதுக்கும், கூத்தால் கண்ணுக்கும் இன்பம் பயக்கும் இக்கலையினை “பாமர மக்களின் பல்கலைக்கழகம்” என்கிறார் நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம். தனி பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடுவதை ‘நாட்டியம்’ என்றும், ஏதேனும் ஒரு கதையை தழுவி வேடம் புனைந்து ஆடுவதை ‘நாடகம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
மட்டக்களப்பு கலைப்பாரம்பரியத்தில் வசந்தன் கூத்துக்களின் போக்கு
- தங்கராசா கோபிநாத
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மட்டக்களப்பு கலைப்பாரம்பரியமானது பல தனித்துவ அம்சங்களை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. தொன்று தொட்டு பல கலைவடிவங்கள் தம்மிடையே காணப்படுகின்றன. கூத்து, நாட்டாரிசை, சடங்கிசை, கவிகள், ஆடல்கள் என்பன எம்முன்னோர்களால் உருவாக்கப்பட்டு , தமது வாழ்வியலில் ஒரு அங்கமாக கருதப்பட்டன ஆகும். வசந்தன் கூத்துக்கள் மட்டக்களப்பில் தொன்று தொட்டு மரபில் காணப்படுகின்றன. இது மட்டக்களப்பு மக்களது சுதேச கலைவடிவமாகும். இதனை வசந்தன் ஆடல், வசந்தன் ஆட்டம், வசந்தன் கூத்து என்றெல்லாம் அழைப்பர். வசந்தன் கூத்தின் தனித்துவம், வரலாற்றுப்பின்னணி, தொன்மை என்பவற்றை நவீன யுகத்தில் இளஞ்சமுதாயத்தினருக்கு தெரிவிக்கும் வகையிலும் இலங்கை மட்டக்களப்பில் தனித்துவமான கலைவடிவங்கள் காணப்படுவதனை உலகறியச்செய்வதனையும் ஆய்வுநோக்காகக் கொண்டு ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. களஆய்வு,விபரண ஆய்வு, வரலாற்றுஆய்வு போன்ற முறையியல்கள் ஊடாக ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலைகள்: தெருக்கூத்து வளர்ச்சியும்> வாழ்வும்
- ப. ஜார்ஜ்
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் நம்பிக்கைகளயும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியல் ஆகும்.
மனிதர்களின் அழகிய படைப்பே கலை என்கிறோம். இக்கலைகள் பெரும் பொழுதுப்போக்கு மட்டுமல்லாமல் அறிவுச்சார்ந்த பண்பாட்டையும் முன்னிறுத்துகிறது.
நாட்டுப்புறக் கலைகளிலிருந்து தான் செவ்வியல் கலைகள் தோன்றி வளர்ந்தன எனலாம். தமிழரின் பண்பாட்டு ஊற்றுக் கண்ணாகத் திகழ் பவையே நாட்டுப்புறக் கலைகள் ஆகும்.
நாட்டிய நாடக உருவாக்கத்திற்கு ருக்மிணிதேவி அம்மையாரின் பங்களிப்பு
- கலாநிதி (திருமதி) துஷ்யந்தியூலியன்
- ஜெயப்பி ரகாஷ்
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
காலச்சக்கர சுழற்சியில் மெருகூட்டப்பட்டு தனக்கென்று தனியொரு இடம் பெற்று அன்று தொட்டு இன்று வரைதன் நேர்த்தன்மையும் தொன்மைத்தன்மையும் மாறாது மிகவும் கம்பீரமாக திகழ்வதாய் பரதக்கலை விளங்குகிறது. அந்த வகையில் அதன் மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்தவர்களில் ஸ்ரீமதி ருக்மிணிதேவி அம்மையார் அவர்களைக் குறிப்பிடலாம். அம்மையாரே முதன்முதலில் சாஸ்திரீயரீதியில் நாட்டிய நாடகங்களை வடிவமைத்து அரங்கேற்றினார். அதனை அடியொட்டி பல நாட்டிய நாடகங்கள் இன்று வரை அரங்கேற்றப்பட்ட வண்ணமே உள்ளன. ஆனால் தற்காலத்தில் சில நவீன மயமாக்கப்பட்ட நாட்டிய நாடகங்கள் எழுந்த வண்ணமே உள்ளன. அவை நாட்டிய நாடக வடிவத்திலும் நெறியாள்கையிலுமிருந்தும் சற்று விலகிக் காணப்படுகிறது. அவற்றில் சில ஆஹார்யா அபிநயங்களான அரங்க அலங்காரம், ஒப்பனை, உடை, ஒலி மற்றும் ஒளி என்பவற்றிற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகக் காணப்படுகின்றன. ஆகையால் அவ்நாட்டிய நாடகங்கள் பரத நாட்டிய முன்னோடியான ருக்மிணிதேவி அம்மையாரின் நாட்டிய நாடகங்களை அடி யொட்டி அமைந்தால் சிறந்த நாட்டிய நாடகங்களாக உருவெடுக்கும் என்ற கருத்தினை வெளிக் கொணர்வதற்காகவே இவ்வாய்வானது மேற் கொள்ளப்படுகிறது.
நவாலியூர் சோ.நடராசரின் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு நாடகங்கள் ஓர் ஆய்வு
- கோபாலசர்மா ரகுவரன்
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சைவத்தையும் தமிழையும் போற்றி வளர்த்த வரும் தமிழ் மொழியூடாக சமஸ்கிருத மொழியின் சிறப்பினை அறிய கணிசமான பங்களிப்பினை ஆற்றியவரே நவாலியூர் சோ,நடராசன் ஆவார். இவர் சைவத் தமிழ் புலவர் மரபில் வந்த நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சபாசா பண்டிதர் என போற்றப்பட்டவர் வித்தியாரத்தினம் சோ.நடராசன் ஆவார். இத்தகைய பாண்டித்தியத்தால் பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்து உள்ளார். அவற்றில் காளிதாசரின் சாகுந்தலம், சூத்திரரின் மிருச்சகடிகம் ஆகிய இரு நாடகங்களையும் தமிழில் யாத்தமையை சிறப்பாக கூறலாம். அந்த வகையில் வித்தியாரத்தினம் அவர்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற ரீதியிலும், இருபதாம் நூற்றாண்டில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு இவரது மொழிபெயர்ப்பு நாடகங்களின் பங்கு பற்றியும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
திருக்குறளின் இன்பத்துப் பாலில் நாடகப் பாங்கும் பயனும்
- பொ. தங்கமணி
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
புதருக்குள் புலி. இதைப் பார்த்தவனுக்கோ பேசவோ, எழுதிக் காட்டவோ தெரியாது. சத்தமிட்டால் புலி தாக்கி விடும். ஆபத்தைத் தன் கூட்டத்திற்கு எப்படியும் தெரிவித்தாக வேண்டும். அப்போது அவன் என்ன செய்திருப்பான்? அவன் கூட்டத்தாரின் முன்பு செய்கைகள் வழியே நடித்துத்தான் காட்டியிருக்க முடியும். இப்படியாக ஒன்றைப் போலச் செய்து காட்டும்போதே நாடகக்கலை அவனுள் பிறந்து விட்டது. இவ்வாறாக ஆதி மனிதன் பேச்சு, எழுத்து போன்ற எந்த தொடர்புகளும் இல்லாதபோதே நாடகமானது உணர்வுகளின் உடல் மொழியாகப் பிறந்து விட்டது. இதற்குப் பாட்டு, இசை, இலக்கணம், வரையறை போன்ற எந்த சூத்திரங்களும் தேவைப்படவில்லை.
தமிழ் நாடக மரபில் வெறியாட்டு கூத்தின் தொன்மையும் தற்கால வளர்ச்சியும்
- முனைவர் சோ. சுகன்யாதேவி
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
தமிழ்ச் சமூகமானது நிகழ்த்துக் கலைகள் நிறைந்த ஒரு சமூகமாகும். விழாக்கள், கொண்டாட்டம், கேளிக்கை, பொழுதுபோக்கு, சடங்கு எனச் சமூக வாழ்வியலின் பல்வேறு சூழல்களில் நிகழ்த்துக் கலைகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. தமிழரின் தொல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும்; சங்கம் மருவிய காலத்தவையான சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காப்பியங்களும்; பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பண்டை தமிழ்ச்சமூகம் குறித்தும் அச்சமூகத்தில் நிகழ்த்தப்பட்டு வந்த கலைவடிவங்கள் குறித்தும் பற்பல தகவல்களை உள்ளடக்கியவையாக காணப்படுகின்றன. இத்தகைய கலைவடிவங்களில் நாடகம் என்பதும் அடங்கும். நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக் காட்டப்படுவது நாடகம். நாடகம் தர்ன கதை தழுவிய கூத்தாக மாறியது. அக்கூத்துக்களுள் ஒன்றுதான் வெறியாட்டு என்பது. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி, தலைவனை எண்ணி உடல் இளைப்பதும், தலைவியின் இளைப்பிற்கான காரணத்தை நற்றாய் வேலனையோ, குறிசொல்லும் கட்டுவிச்சியைக் கேட்டறிவதும், தலைவியின் மாற்றத்திற்கு முருகன் அணங்கினான் என்பதும், வெறியாட்டு அயர முருகன் சினம் தணிந்து, மகள் நலம்பெறுவாள் என்று கூற, தாய் மகளுக்கு வெறியாட்டு விழா நடத்துவதே வெறியாட்டு ஆகும். இந்த வெறியாட்டின் தொன்மையையும் தற்கால நீட்சியினையும் விளக்குவதே இக்கட்டுரை ஆகும்.
நாடகக்கலை மற்றும் சமண காப்பிய நாடகம் பற்றி - ஓர் ஆய்வு
- முனைவர். சே. செந்தூர் பாண்டியன்.இ
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
புராதன (பழங்கால) மனிதன், பருவகால மாற்றங்களையும், இயற்கையோடு நிகழும் பல மாற்றங்களையும் கண்டு, இவை தனக்கு மேலான சக்திகளின் செயற்பாடே என்று நம்பினான்;. அதனை அடிப்படையாகக் கொண்டே சடங்குகள் உருவாகின. இதுவே நாடகமாக வளர்ந்தது.
தமிழர் கூத்து மரபில் - நாடகமும் கூத்தின் படிநிலை மாற்றமும்
- முனைவர். வீரலட்சுமி
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மாந்தர்களின் தேவையை நிறைவு செய்வதற்கான அறிவையும் ஆற்றலையும் தரவல்லது கலையாகும். அது எண்வகை மெய்ப்பாடுகளையும். அதன் பல்வேறு நிலைகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. கூத்திலிருந்து தோன்றிய கலை வடிவங்களான நாட்டியம், நாடகம் என்னும் கலை மக்களுக்கு மனமகிழ்ச்சி, அறிவை வளர்க்கும் கல்விச்சாலையாக விளங்கியுள்ளது. முற்காலத்தின் வாழ்வியல் ஊடகமாகத் இருந்த கலைகள் பற்றிய இலக்கிய செய்திகளையும், அதற்கான இலக்கண நூல்களையும் சான்றோர்கள் வகுத்துள்ளனர். இதனில் பண்டைய மக்களின் வாழ்க்கை ஒழுக்கலாறுகளை வெளிப்படுத்தும் கலையாகக் கூத்துக்கலை அமைகிறது. இனக்குழு மக்களின் கூட்டு வாழ்க்கை முறையில் போன்றிய கூத்துக் கலையின் படிநிலை வளர்ச்சியை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது
புராணக் கதையினூடாக அணுவாயுத அரசியலைப் பேசும் நவீன பஸ்மாசுரன் நாடகம்: ஓர் ஆய்வு
- கலா நிதி
- துஷ்யந் தியூலியன்
- ஜெயப் பிரகாஷ்
- Aug. 5, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
நாடகமும் அரங்க ஆற்றுகைகளும் அதன் வரலாற்றில் மனிதர்கள் எதிர்கொண்ட சவால்கள் பலவற்றின் பதிவுகளாகவும், சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்த வாழ்வியலின் சக்தி வாய்ந்த ஊடகமாகவும் விளங்கி வருவதனைக் காண்கின்றோம். இயற்கையாலும் செயற்கையாலும் சிதறிச் சின்னாபின்னப்படும் மனித வாழ்வியலைச் சீரமைத்து வரும் சமுதாய அரங்காகவும், சவால்களை எதிர்கொள்வதற்கான உத்வேகத்தை ஊட்டிய சக்திமிக்க ஊடகமாகவும், பேசுவதற்கு அச்சப்பட்டுத் தயங்கிய பேசாப்பொருள்களைப் பற்றிப் பேசி மனிதத்துவத்தையும் அதன் மனச்சாட்சியையும் சமூக நீதியையும் வலுவாக்கிய ஆக்கபூர்வமான போராட்டக் கலை வடிவமாகவும் நாடகமும் அதனோடிணைந்த ஆற்றுகைகளும் விளங்கி வருவதனைக் காண்கின்றோம். இக்கலையின் செல்நெறியில் நேரடியாகவும், பூடகமாகவும் இவ்விடயங்கள் எடுத்தாளப்பட்டு வருவதனை ஆய்ந்தறிய முடிகின்றது. இதன் காரணமாக நாடகமும் அதனோடிணைந்த ஆற்றுகைகளும் பல்வேறு துறைகளையும் உட்கொண்டு பயணிப்பதனை வரலாற்றில் நிறையவே காண்கின்றோம். இப்பல்துறைகளின் செல்வாக்கையும் நாடக ஆய்வறிவாளர் ஆராய்ந்து இலக்கியம், அறிவியல், அரசியல், வரலாறு, பொருளியல், உளவியல் எனத் தனித்தனித்துறைசார்ந்த நாடகங்கள் என வகைப்படுத்தி எடுத்துக் காட்டியுள்ளதையும் கற்றறிய முடிகின்றது. இந்த வகையில் ஈழத்துத் தமிழ் நாடக வலாற்றில் 1990 களில் உருவாக்கம் பெற்று பல்வேறு ஆற்றுகைகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ள 'நவீன பஸ்மாசுரன்' எனும் நவீன நாடகமானது விஞ்ஞான அறிவியல் சார்ந்த ஒரு நாடகமாக எடுத்துக் காட்டப்படும் அதேவேளை அந்நாடகம் எவ்வாறு புராண தொன்மக்கதையினூடாக அணுவாயுத அரசியலைப் பேசும் ஒரு நவீன நாடகமாக உள்ளது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
களிகம்பு ஆட்டத்திற்கும் வசந்தன் கூத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமை
- திருமதி. கிருபாஞ்சனா கேதீஸ்
- Aug. 4, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மட்டக்களப்பு சுதேச கலைவடிவங்களில் வசந்தன் ஆடலும் ஒன்றாகும். வசந்தன் ஆடலானது தொன்றுதொட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் கலை வடிவம் ஆகும். இதனை வசந்தன் ஆடல் , வசந்தன் ஆட்டல் , வசந்தன் கூத்து என்றெல்லாம் அழைப்பர். இதனை வயல்களிலும் ஆலயத் திருவிழாக்களிலும் பொது நிகழ்வுகளிலும் ஆடுவர். வசந்தன் ஆடலில் பல வகைகள் காணப்படுகின்றன. இதில் பக்தி, உலகியல் நாட்டார் இயல். நகைச்சுவை என்பன கருப்பொருளாகக் காணப்படும். இதனைப் போல் முஸ்லிம் மக்கள் களிகம்பு என்ற ஆடலை தமது காலாச்சா விழாக்களில் ஆடி வருகின்றனர். வசந்தன் ஆடலுக்கும் களிகம்பு ஆட்டத்திற்கும் இடையே காணப்படுகின்ற ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் ஒப்பிட்டு ஆராய்வதனை ஆய்வு நோக்காகக்கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அத்துடன் வரலாற்று ஆய்வு. விபரண ஆய்வு, சமூகவியல் ஆய்வு, ஒப்பிட்டு ஆய்வு போன்ற ஆய்வு முறையியல்கள் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
குறுந்தொகையில் தனி உரையாடல்
- க. செல்வராஜ்
- பா. சிவசங்கரன்
- Aug. 4, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள், தலைவன், தலைவி, தோழி முதலானவர்களின் செயல்களை அவர்களின் கூற்றுகள் வாயிலாகவும் வெளிப்படுத்துகின்றன. எனவே பண்டைய அகப்பொருள் பாடல்கள் நாடக இயல்பின, என்றும் அகப்பொருள் வெளியீட்டிற்கு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்றும் தொல்காப்பியனரால் வகுக்கப்பட்டுள்ளன. சங்க அக இலக்கியங்கள் அனைத்தும் இந்நெறியிலேயே படைக்கப்பட்டுள்ளன. திணை, கைகோள், பொருள்வகை, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு என்னும் உறுப்புகளை அமைத்து அப்பாக்களைப் பாடுதல் வேண்டும் எனத் தொல்காப்பியனார் இலக்கணம் வகுப்பர். அகப்பொருள் பாடலில் உணர்ச்சி வெளிப்பாடு நாடகத் தன்மையில் அவ்வகையில் குறுந்தொகைப் பாடல் தனி உரையாடல் என்ற உத்தி முறையை விளக்கவே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஈனழத்து – நாடகங்களும் காளிதாசரின் சாகுந்தலமும்
- D. சங்கீதா
- முனைவர் து. மலர்விழி
- Aug. 4, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
உலகில் எம்மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு. முத்தமிழ்; என்ற சிறப்பு. நாடகத்தமிழ் தொன்றுதொட்டுப் படிப்படியே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. நாடகம் என்னும் சொல் நாடு + அகம் எனப்பிரியும் நாட்டை அகத்தில் கொண்டது. நாடகம் நாட்டின் கடந்த காலம் நிகழ்காலம், வருங்காலம் என தன் அகத்தே காட்டுவது நாடகம். இதற்கு கூத்துக்கலை என்றும் கூறுவர். நாடகத்திற்கு போலச் செய்தல் என்னும் பண்பு உண்டு. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘கூத்தாட் பவைக்குழாத் தற்றே’ என்னும் குறள் வழியாக நாடக அரங்கம் இருந்ததை அறியலாம்.
இலக்கியத் துறைக்கான பிரமிளின் பங்களிப்பு – ஓர் ஆய்வு
- M. S. M. Mafaz
- Aug. 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
கணபதிப்பிள்ளை விருட்சலிங்கம் - அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாக 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் பிரமிள் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தருமுசிவராமு என்பதாகும். இவர் திருகோணமலை இராமகிருஷ்ணா மிஷன் நைட் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். கல்லூரியில் படிக்கும் போதே ‘யாழ்’ என்னும் கையெழுத்துப் பிரதியில் கவிதை, மரபுக்கவிதை, கதை என்பவற்றை எழுதினார். அந்தக் கையெழுத்துப் பிரதியிலேயே சித்திரத் தொடர்களையும் ஓவியங்களையும் வரைந்தார்.
காட்சிசார் மொழியில் அர்த்த வெளிப்படுத்தல் - ஓவியங்களில் அர்த்தம் பற்றிய ஒருஆய்வு
- V. Alagaratnam
- Thusiyanthi Sathiyajith
- Aug. 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மோழிமனித தேவையின் நிமித்தம் வளர்ச்ச pபெற்ற அல்லது உருவாக்கம் பெற்ற ஒரு ஊடகம். இவ்ëடக மின்ற pகருத்துப் பர pமாற்றம் இடம்பெறுவது அசாத்தியமானது. இம்மொழியை ஒவ்வொரு துறையும் தமக்கேற்றாற ;போல் பிரத்தியேக முறையில் பாவிக்கின்றன. ஆனால் மொழி எதுவாயினும ;இ அதுசொல ;,வாக்கியம்இ கதைஎன்று அர்த்தத்துடன் பயன்படுத்தப்படுகின்றது. இதனை வாக்கியமொழி (ஏநசடியட டுயபெரயபந) என்பர். இதற்கும் அப்பால் குறியீடுகள்;இ காட்சிகள் முதலிய உருக்களினால் அர்த்தத்துடன் பேசுவதை காட்சிசார்மொழி (ஏளைரயட டுயபெரயபந) என்பர். காட்சிசார் மொழியை கலையுருவாக்கங்களில் பயன்படுத்துவர். குறிப்பாக இம்மொழிஅதிகதாக்கம் செலுத்தும் ஒரு ஊடகம் ஓவியமாகும். ஓவியம் எந்தளவு ஒரு மொழியாக பயன்படுத்தப்படுகின்றது என ஆராய்வதே இவ்வாய்வாகும். இது மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் இடம்பெற்றது. அவை: மொழியின் பயன்பாட்டின் யதார்த்தத்தை விளக்கு வது இ ஓவியம் ஒருமொழியாக இருக்குமாற்றை தெளிவுபடுத்துவது இ ஓவிய மொழியின் தனித்துவம் பற்ற pஉதாரணங்களுடன் தெளிவுபடுத்தவது. இவ்வாய்விற்காக பண்புசார் ஆய்வு முறைபயன்படுத்தப்பட்டது. இரண்டாந்தரா தரதரவுகளே முக்கியம் பெற்றதாயினும் சில ஓவியர்களுடன ;இடம ;பெற்ற பேட்டியும் (ஐn-னநிவா iவெநசஎநைற) முதலாம் தராதரதரவுகளாக கணிக்கப்படக ;கூடியன. பண்புசார் அடிப்படையில் தரவுகள் பகுப்பாய்விற்கு பயன்படுத்தப்பட்டு ஓவிய மொழியின் இயல்பு பற்றியயதார்த்தம் தெளிவு படுத்தப்படுகிறது.
அறிஞர் அண்ணா நாடகங்களில் காணலாகும் சமுதாயப் பார்வை
- கா. சுதாஹரி
- Aug. 2, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இயல், இசை, நாடகம் என்ற மூன்று கூறுபாடுகளையும் தன்னகத்தே அடக்கிய ‘முத்தமிழ்’ என்று தமிழ்மொழி சிறப்பிக்கப்படுகிறது.மனத்தின் வெளிப்பாடு இயல், நாவின் புலப்பாடு இசை, உடலின் செயற்பாடு நாடகம் என முத்தழிழும் மனம், மொழி, செயற்பாடுகளோடு நெருங்கிய தொடர்புடையன. அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்ட மற்றும் நடிக்கப்பட்ட நாடகங்கள் மையப்படுத்திய பொருண்மைகளை எல்லாம் புறந்தள்ளி நடைமுறை சமுதாயப் பிரச்சனைகளை மையமிட்ட நாடகங்களைப் படைத்தார் அறிஞர் அண்ணா ஆண்டவனையும் அரசனையும் மையமாகக் கொண்டு நடிக்கப்பட்டு வந்த நாடக உலகில் சமுதாயத்தில் உள்ள அநீதி, நேர்மையின்மை, கொடுமை ஆகியவற்றை எடுத்துக்காட்டி நாடகங்களை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. இதனால் புதியவாசகர்கள் பலரை அவருக்குத் தேடிதந்தது. அண்ணாவின் நாடகங்களில் நீதிதேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி முதலியவைகளில் உள்ள சமுதாயபிரச்சனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Adapting to the Adaptation Process with a special reference to Remember Caesar and Marathi Mannan
- U. Thulasivanthana
- Aug. 1, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
The proliferation of adaptations has been steadily increasing. Many interesting works have been adapted throughout the history. The art of transposing creative works from one medium to another is not new. Aeschylus, Jean Racine, Johann Wolfgang von Go the, and Lorenzo Da Ponte are some of the famous adaptors. The adaptors respond to source materials through transposing themes, characters, settings, point of view, structure of narration, etc. Every adapter has his or her own approach, techniques and style for creating adaptations. This qualitative and descriptive research attempts to elucidate how K.Ilancheran sustains his creativity and figures out a distinctive way for creating the adapted play Marathi Mannan in order to share the experiences he encountered in Remember Caesar.
எட்டுத்தொகை இலக்கியத்தில் அகப்புறக் கருத்துக்கள்
- வெ. சுதா
- நெறியாளர் முனைவர் அ. கௌரன்
- April 18, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க இலக்கியத்தில் அகமும் புறமும் பாடுபொருளாக அமைந்துள்ளன. சங்க அகப்பாடல்களில் அகவுலக அறங்களும், புறப்பாடல்களில் புறவுலக அறங்களும் பொதிந்துள்ளன. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தன என்பதை சங்கப்பாட்டும், தொகையும் தெளிவாகக் காட்டுகின்றன. புறவொழுக்கங்களை மேற்கொள்வதற்குரிய வரம்பாக அமைவது அரசியல், பண்டையத் தமிழரின் நாட்டு வாழ்வுக்கு சமூகம் இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்தனர். அகவாழ்வின் செம்மையையும் புறவாழ்வின் மாண்பையும் கண்டறிவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்ககால ஆடல் மரபுகள்
- கலாநிதி தாக்க்ஷாயினி பரமதேவன்
- April 7, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
தமிழ் இலக்கியங ;கள் காலத்தொன்மை உடையவை. செறிவானவை. தமிழ் இலக்கியங ;கள் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு காலம் பழமை வாய்ந்தவையாகும். தமிழ் இலக்கியங்களை காலத ;தின் அடிப்படையில் பகுக்க முடியும். அவையாவன சங்ககாலம், நீதி இலக்கியக்காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம், சிற்றிலக்கியகாலமாகும்.
ஒளவை காட்டும் தொழில்நுட்பம்
- ஆ. குழந்தை
- March 19, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
நாம் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். தொழில்நுட்பம் உயிரினங்கள் வாழத்தொடங்கியதிலிருந்து தொழில்நுட்பம் இருந்து வருகிறது. வாழ்வதற்கான வழிமுறை வாழ்வுநுட்பமாகும். கற்றலுக்கான, கற்பித்தலுக்கான வழிமுறை கற்றல் நுட்பமாகவும், கற்பித்தலின் நுட்பமாகவும் இருக்கும். ஒரு பொருளை உற்பத்திசெய்ய தேவையான வழிமுறைதான் உற்பத்திநுட்பமாகும் அல்லது தொழில்நுட்பமாகும். ஒரு தொழிலை செய்வதற்கு தேவையான வழிமுறைதான் தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பம் கடினமாக இல்லாமல் எளிதாகவும், அதிக காலஅளவு இல்லாமல் குறைந்த காலமுள்ளதாகவும், அதிக செலவில்லாமல் குறைந்த செலவுள்ளதாகவும், குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடியதாகவும் தரமுள்ளதாகவும் இருக்கவேண்டும். தொழில்நுட்பம் இயற்கையை அழிக்கக் கூடியதாக இருக்க கூடாது. தொழில்நுட்பம் எப்பொழுதும் ஆக்கக்கூடியதாக இருக்கவேண்டும். தொழில்நுட்பம் எல்லா உயிரினங்களும் இணைந்து அல்லது இணைத்து வாழ உதவவேண்டும். தொழில்நுட்பம் குறைந்த செலவில், நேரத்தில், இடத்தில், வேலையாட்களைக்கொண்டு அதிக வருமானம், வசதி, நீண்டகால பயன் ஆகியவை பெற உதவுவதுதான் தொழில்நுட்பமாகும். உடல்நலத்தை சிதைக்காமல், வளமான வாழ்வுக்கு வழிகாட்டுவதுதான் தொழில்நுட்பமாகும். அடுத்தவரை சுரண்டி அதிக வருமானம் மட்டும் தருவது தொழில்நுட்பமல்ல. நயனுள்ள வருமானத்துடன் வாழ்வின் விழுமியங்களைத் தருவதுதான் சிறந்த தொழில் நுட்பமாகும். நயனுள்ள, ,யற்கையான, செலவற்ற, நலமுள்ள தொழில்நுட்பம்தான் ஆக்கமுள்ள தொழில்நுட்பமாகும். இந்த ஆக்கமுள்ள தொழில்நுட்பத்தை தமிழறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர். அவர்களில் ஒளவையார் தனது செய்யுளில் எடுத்தியம்பும் ஆக்கமுள்ள தொழில்நுட்பத்தை இங்கு சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிரயாகை புதினத்தில் காணலாகும் உத்திக்கூறுகள்
- அ. விமலா
- ப. வளர்மதி
- March 19, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இலக்கிய வகைமைக்குச் சுவை சேர்ப்பதே உத்திகள்தான் எனலாம். ஓர் இலக்கியம் சிறப்பாகப் போற்றப்படுவதற்குக் காரணம் அவற்றில் கூறப்படும் கருத்தே முக்கியக் காரணம் வகிக்கின்றது. வெறுமனே கருத்தை மட்டும் எடுத்துக் கூறினால் வாசகர் புரிந்து கொள்ள முடியாது. இதனைத் தெரிந்த கவிஞர்கள் இயற்கை, வடிவம், சொல்லாட்சி, ஓசை நயம், கருத்து, கற்பனை, உவமை, படிமம், குறியீடு போன்ற பலவயைhன முறைகளைக் கையாளுகின்றனர். இவையே உத்திகள் என அழைக்கப்படுகின்றன. அவ்வகையில் ஜெயமோகனின் ‘பிரயாகை’ புதினத்தில் காணலாகும் உத்திக்கூறுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
தோழி கூற்றுப் பாடல்கள் உணர்த்தும் அகத்திணை மாந்தர்கள்
- சி. பிரபாவதி
- ச. அழகிரி
- March 19, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க இலக்கியங்கள் திணை துறைகளுக்குத் தரும் சிறப்பைக் காட்டிலும் அகமாந்தர்களுக்கு சிறப்பிடம் தந்;துள்ளதை காணமுடிகிறது. சங்க இலக்கியங்களில்; திணை அடிப்படையிலும், கூற்று அடிப்படையிலும்; பாடல்கள் அமைந்துள்ளன. அகமாந்தரின் மன உணர்வுகள் கூறுவோரின் இன்ப, துன்ப மனநிலைக்கு ஏற்பவும் கேட்போரின் மனநிலைக்கு ஏற்பவும் மாறுபட்டு ஒலிக்கின்றன. இலக்கண, இலக்கியங்களில் அகமாந்தர்களையும் அவர்தம் உணர்வுகளையும் முன்னிலைப்படுத்துகின்றனர். தலைவன் தலைவியின் காதல் மன உணர்வுகளையும், அவ்வுணர்களுக்குத் துணைநிற்கும் பிற அகமாந்தர்களின் மன உணர்வுகளையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
மருதகாசியின் திரையிசைப் பாடல்களில் சமூக அவலங்கள்
-
Abstract
உலக மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக்காட்டுவது திரைப்படம் எனலாம். ஏதோ ஒரு வகையில் திரைப்படம் பார்ப்போரின் மனதை அத்திரையிசைப் பாடல்கள் கொள்ளை கொண்டு விடுவதுடன் திரும்பத்திரும்ப வாயசைத்து பாடும் படியும் செய்து விடுகின்றன. அவ்வகையில் சமுதாயத்தில் உழைக்கும் ஏழை வர்க்கத்தினருடைய இயல்பு வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் அவலங்களை அம்மக்கள் ஆறுதல்கொள்ளும் வகையில் பாடுவதில் தேர்ந்த கவிஞராக விளங்கியவர் மருதகாசி ஆவார். அவரின் பாடல்களில் வழி அறியலாகும் சமூக அவலங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
கூளமாதாரி நாவலில் முல்லைத் திணை வாழ்வியல்
- ரா. ஜெனிபர்
- March 18, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
தமிழர் வாழ்வை ஒருபடித்தான வாழ்வியல் கொண்டதாகக் கருத இடமில்லை. பல்வேறு இனக்குழுக்களின் கூட்டமைப்பாக காலந்தோறும் இருந்து வந்திருக்கிறது. சமூகப் படிநிலை வளர்ச்சியில் பல்வேறு கட்டங்கள் மானிடவியலாளர்களால் கூறப்படுகின்றன. அப்படிநிலைகள் ஒரே காலத்தில் நிகழ்ந்த சமூகமாக சங்க காலம் திகழ்கிறது. அதன் அடையாளமாகத்தான், வேட்டை, மேய்ச்சல், வேளாண்மை ஆகிய தொழிற் சமூகங்கள் ஒரே காலத்தில் நிலவிய தன்மையினைக் காணமுடிகிறது. வேட்டையில் ஈடுபட்ட மக்களாக குறிஞ்சி, பாலைத்திணை மக்களைக் காணமுடிகிறது. ஆறலைத்தல் என்னும் பண்டைய வேட்டைச் சமூக நிலையினைக் குறிப்பதாகும். குறிஞ்சித் திணைக் குறவர்கள், வேட்டுவர்கள், கானவர்கள் என யாவரும் வேட்டையில் ஈடுபட்டு உணவைப் பெற்றனர் எனக் காணமுடிகிறது. இத்திணை நிலைச் சமூகங்கள் காலந்தோறும் மாற்றம் பெற்று வந்தாலும் அதன் எச்சங்களாக பண்டைய மனிதனின் தொழில்களைக் கடைபிடிக்கும் வழக்கம் இன்றைக்கும் காணப்படுகிறது. சம கால இலக்கியங்களில் பண்டைய மனிதர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காணமுடிகிறது. வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட மக்களின் வாழ்வியலை சோளகர் தொட்டி என்னும் ச.பாலமுருகன் எழுதிய நாவலில் சோளகப் பழங்குடிகளின் வாழ்வியலில் காணமுடிகிறது. நெய்தல் நிலத்தவர்களின் வாழ்வியலை ஜோ.டி.குரூஸின் ஆழிசூல் உலகு நாவலில் காணமுடிகிறது. சு.தமிழ்ச்செல்வியின் கீதாரி, பொன்னாச்சாரம் ஆகிய நாவல்களில் மேய்ச்சல் சமூகத்தவர்களின் வாழ்வியலைக் காணமுடிகிறது. சோலை சுந்தரபெருமாளின் நாவல்களில் மருத நிலத்தவர்களின் வாழ்வியலைக் காணமுடிகிறது. இது போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களில் மக்கள் வாழ்வு பண்டைய காலத் தொடர்ச்சியை உடையனவாக இருப்பதைக் காணமுடிகிறது. பாலை நிலத்தவர்களின் வாழ்வியலை எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேலராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்கள் சித்தரிக்கின்றன. வரலாற்றின் தொடர்ச்சியை அடுத்தடுத்த சமூகங்களுக்குக் கடத்துகின்ற வகையில் சமூக அமைப்பு அமைந்துள்ளது. காதல் வாழ்வும், தொழில்களும் காலந்தோறும் வடிவத்தில் மாற்றம் இருந்தாலும் உணர்வு நிலைகளில் மாற்றம் இல்லாத நிலையில் காணப்படுவதை அறிய முடிகிறது. அந்த வகையில் சங்க காலத்திற்கும் சமகாலத்திற்குமானத் தொடர்ச்சியை அறியும் வகையில் இக்கட்டுரை சங்க முல்லைத்திணை வாழ்வியலை பெருமாள் முருகன் எழுதிய கூளமாதாரி நாவலில் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கவிஞர் அ.வெண்ணிலாவின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனை
- வி. எம். பெனாசிர் ஜெய்னப்
- ஜெ. தேவி
- March 11, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி”
எனப் புறப்பொருள் வெண்பா மாலை தமிழ் மொழியின் தொன்மையை நமக்கு கூறுகிறது. தமிழ் இலக்கியம் தொ.ன்மையானது. பண்பட்டது. வரலாற்றுச் சிறப்புடையது. எப்பொழுது தோன்றி வளர்ந்தது என்று அறுதியிட்டு கூற முடியாதஅளவுக்குப் பழைமையானது. அகம், புறம் எனப் பேசப்பட்ட தமிழிலக்கியங்கள் இன்றைய சமகால அளவில், கோட்பாட்டளவில் ஆழ வேரூன்றிப்பரந்து விரிந்து வளர்ந்தது காணப்படுகிறது. வடக்கே வேங்கடத்தையும் தெற்கே குமரியையும் கிழக்கும் மேற்கும் கடலை எல்லையாகக் கொண்டிருந்தது தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் நாட்டை ஆண்டதோடு சங்கம் அமைத்து தமிழை வளர்த்தனர். கி.மு.500 முதல் கி.பி.200 வரையில் உள்ள காலம் சங்க காலம் என்று குறிப்பிடப்படுகிறது.
“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக” (புறநானூறு 72)
என்னும் புறநானூற்று வரிகள் மூலம் மன்னர்கள் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்று காரணமாக புலவர்கள் தலைமையில் தமிழ் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகிறது.
பரிபாடல் கட்டமைப்பும் திருமால் பற்றிய தொன்மமும்
- டாக்டர் வானதி பகீரதன்
- March 11, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
எட்டுத்தொகை நூல்களுள் ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியமாக விளங்கும் பரிபாடல் கட்டமைப்பில் திருமால் பற்றிய தொன்மம் ஆறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமாலின் தோற்றப் பொலிவு, அருட்சிறப்பு, வீரச்சிறப்பு, கொடிச்சிறப்பு, புராணச் செய்திகள், அவதாரச் செய்திகள், திருமலிருஞ்சோலையின் வளம், ஆதிசேடனின் பெருமை முதலானவற்றைக் குறிப்பிடும் போது இத் தொன்மம் பற்றி அறிய முடிகின்றது. அந்தவகையில் பரிபாடலின் அமைப்பினையும் செவ்வேளின் தொன்மம் பற்றிய செய்திகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
நாட்டுப்புறக் கதைகளில் மாமியார் மருமகள் சிக்கல்கள்
- ம. பழனி
- March 4, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
நாட்டுப்புறக் கதைகள் என்பவை காலங்காலமாக மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வரும் ஓர் இலக்கிய வடிவமாகும். நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டோ, கற்பனையாகவோ, மக்கள் குழுவினரிடையே எடுத்துரைக்கப்படும் கதை, தோற்றம் பற்றிய தொன்மை, பொழுது போக்கு, அறிவுரைக் கூறுதல், வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் வழங்கி வருவனவாகும். மரபு வழியாக மக்களிடையே உரைநடையாக எடுத்துரைக்கப்பட்டு வாய்மொழியாகப் பரவி வரும் கதைகளில் மாமியார் மருமகள் உறவுகளைக் குறித்து வழங்கிவரும் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றி இக்;கட்டுரை ஆராய முற்படுகி;றது.
ரா.ப.அரூஸ் படைப்புகளில் மெய்ப்பாடுகள்
- ப. சக்திவேல்
- March 4, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இன்றைய அவசர உலகில் உணர்வுகளுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. உணர்வுகளே ஒவ்வொரு உறவுகளையும் இணைக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் மனிதர்களின் வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த மெய்ப்பாடுகள் அமைகின்றன. அவ்வாறான மெய்ப்பாடுகளை இலங்கையிலுள்ள ரா.ப.அரூஸ் என்னும் படைப்பாளரின் படைப்புகளின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காலகண்டம் புதினத்தில் பொற்கொல்லரின் தொழில் சார் பண்பாடு இனவரைவியல் கோட்பாட்டின் அடிப்படையில்
- இரா. சூர்யா
- March 4, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சமுதாயப் பண்பாட்டு மானிடவியலுக்கு அடித்தளமாகத் திகழ்வது இனக்குழுவியலேயாகும். ‘இனக்குழுவியல்’ என்னும் பொருளுடைய Ethonos, Graphic ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. Ethonos என்பதற்கு எழுதுவது அல்லது வரைதல் என்பது பொருள். ஆகவே இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது. அந்த வகையில், பொற்கொல்லர் பற்றிய காலகண்டம் நாவலும் ஓர் இனக்குழுவின் வாழ்வியலை குறிப்பிடுவதாக அமைந்த நாவல் ஆகும். பொற்கொல்லரின் இடப்பெயர்வு முதல் இடவரவு, வாழ்வியல் முறை, வாழ்வியல் கூறுகள், தொழில், சமூக நிலை, வாழ்வியல் மற்றும் தொழில் ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகள், சிக்கல்கள், பண்பாடு, பழக்கவழக்கம், சடங்குகள் என்று பொற்கொல்லர் சமூகம் குறித்த பல தகவல்களை நாவல் பதிவு செய்கின்றது. நாவல் பதிவு செய்யும் பொற்கொல்லரின் தொழில் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. பொற்கொல்லரின் தொழில் சார்ந்து விளங்கும் பண்பாடு, கால மாற்றத்தால் தொழிலில் ஏற்பட்ட மாற்றம் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கங்கள், தொழில் சார்ந்து விளங்கும் தெலுங்கு மொழி அந்த இனத்தின் பண்பாட்டு கூறாக விளங்கும் தன்மை குறித்தும் இக்கட்டுரை விவரிக்கிறது.
ஐங்குறுநூற்றில் மருதத்திணையில்பெண்களின் நிலை
- கோ. தேவிபூமா
- அ. ரேவதி
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு மட்டுமே உண்டு. இப்பெருமக்கள் வளர்த்த இலக்கியங்கள்எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகும். அவை எட்டுத்தொகையில் மூன்றாவதாக உள்ளஅகஇலக்கியமான ‘ஐங்குறுநூற்றில் மருதத்திணையில் பெண்களின் நிலை ’என்னும் இக்கட்டுரையின் தலைப்பின்கீழ் ஆராயப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் பெண்கள் குறிப்பாக ஐங்குறுநூற்றில் பெண்கள் அவர்களின் நிலை பற்றி எடுத்துரைக்கும் படியாக அமைந்துள்ளது. இதில் தலைவி, தோழி, பரத்தை,காதற்பரத்தை ஆகிய பெண்கள் இடம்பெறுவார்கள். அவர்களின் ஒவ்வொரு நிலையில் இருந்துஅவர்களுக்கான வாழ்க்கைச் சூழல்எவ்வாறு அமைந்துள்ளது என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது.தலைவி இல்லறம் நடத்தும் முறை, குழந்தைப் பேறு அடைத்தல், ஊடலில்தலைவி,கூடிமகிழ்தலில் இவ்வாறு தலைவி நிலைகளை ஆராயப்பட்டுள்ளது.தோழி அக இலக்கியத்தில் தோழியின் பங்கு மிகச்சிறப்புவாய்ந்தவையாகும்.
தமிழர் வாழ்வியலில் தோற்கருவிகளும் பண்பாட்டு விழுமியங்களும்
- செ. வீரலட்சுமி
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க காலத்தில் முறையோடு வகுத்து தொகுக்கப்பட்ட மனை நூல்கள் இருந்ததெனச் சங்க இலக்கியங்கள் முலம் அறிகிறோம். “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் மயன் பண்டிழைத்த மரபினது தான்”1 சிலப்பதிகாரம் மயமுறையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
கோயில்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியம் விரித்துக் கூறுகின்றன. அவை, புறநானூற்றுப் பாடல் ஒன்று சங்க காலத்தில் ‘முக்கட் செல்வனாகிய சிவபிரானுக்கு’ அமைந்த கோயிலைக் குறிக்கின்றன.
இன்னப் பிறகோவில்கள் ஆறுமுகம், பலராமன், திருமால் போன்ற தெய்வங்களுக்கு காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில்கள் அமைந்திருந்ததைச் சிலப்பதிகாரத்தில் அறியப்படுகின்றன.
அன்பு நெறியை வளர்க்க சைவசமய அடியார்கள் உழைத்தனர் கடவுள் மனிதர்களோடு தன்னை ஈடுபடுத்துகிறார் என்பதை உணர்த்த கீதையில் கிருஷ்ணனுடைய அவதாரம் விளக்கப்படுகின்றன.
சங்க காலப் போர்நெறிகள்
- வெ. ரேவதி
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மறம் எனப்படும் வீரம் எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வீரத்தை ஈரந்தோய்ந்த வீரமாக மறத்தை அறவழிப்பட்ட மறமாகவும் பகை வெறியை பண்பட்டதகை நெறியாகவும் இலக்கியங்களுக்கு கொடுத்த நாகரிகம் தமிழ் நாகரிகம் ஆகும். அந்நாகரிகத்தை காட்டும் காலப்பெட்டகமாக தொல்காப்பியம் விளங்குவது சாலச்சிறந்தது. புறத்திணை ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள துறைகள் சங்க காலத் தமிழ் மக்கள் போர் நடத்திய முறையை தெளிவாக உணர்த்துகிறது. போர் நடத்திய முறையையும், போர் நெறிகள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
நற்றிணை காட்டும் நம்பிக்கைகள்
- செ. லதா ஈஸ்வரி
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பண்டையத் தமிழர் இயற்கையின் அடிப்படையிலேயே நம்பிக்கைகளை வளத்தனர். இயற்கையின் மூலம் ஏற்படும் அச்சங்களைக் கொண்டு நம்பிக்கைகளை ஏற்படுத்தினர். அதாவது இடி, மழை, மின்னல், புயலின் வாயிலாக ஏற்படும் சத்தங்கள் மனிதனை அச்சமூட்டியது. மக்கள் செய்த குற்றத்திற்குக் காரணமே இயற்கையின் சீற்றம் தான்என நம்பினர். இதனால் இயற்கையை வணங்கத் தொடங்கினான். மனிதர்களின் அச்ச உணர்வால் தான் நம்பிக்கைகள் தோன்றின என்று கூறலாம். மனிதர்களிடம் ஏற்படுகின்ற நம்பிக்கை அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு தலைமுறையினருக்கும் பரவி வருகின்றது எனலாம். சங்க இலக்கியமான நற்றிணையில் மக்களிடம் காகம், ஆவி, பாம்பு மற்றும் அணங்கு பற்றிய நம்பிக்கைகள் இருந்ததிற்கான சான்றுகளோடு விளக்கப்பட்டது.
அ.ரெங்கசாமியின் ‘புதியதோர் உலகம்’ நாவலின் சமூகப்பார்வை
- குணநாதன் ஆறுமுகம்
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மலேசியாவில் தமிழ் இலக்கியம் வேர்விட்டு சுமார் இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடக்கக்காலத்தில் மலாயாவிற்கு வந்த தமிழ்கற்ற தமிழகத் தொழிலாளர்கள் கவிதைகள் படைத்தனர். பின்னர் தமிழ் ஏடுகளை நடத்தியவர்கள் இலக்கியப்பணியைத் தொடர்ந்தனர். ஆனாலும் பெரும்பகுதி எழுத்துகள் அவர்களது தாய் நாடான இந்தியாவை நோக்கியதாகவே இருந்தது. இந்நிலையில் மலாயா விடுதலைக்குப்பின் (1957) உள்நாட்டு எழுத்தாளர்களின் பார்வைமாறத் தொடங்கியது எனலாம். மலாயா வாழ்மக்களின் சிக்கல்களை மையமிட்டு அவர்கள் எழுதத்தொடங்கினர். அவ்வகையில் இன்று மலேசியாவின் மூத்த எழுத்தாளராக விளங்கும் அ.ரெங்கசாமி அவர்கள் தமிழ்நாவல் துறையில் ஆழமாகத் தடம்பதித்தவர். அவர் எழுதிய புதியதோர் உலகம் எனும் வரலாற்று நாவலின் சமூகப்பார்வையைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முப்பெரும் அறநூல்களுள் கல்வி, நட்பு பற்றிய செய்திகள்
- இரா. ஹேமலதா
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான நாலடியாரும், திருக்குறளும் மனித வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் விடைத்தரக் கூடிய அரிய நூல்களாக திகழ்கின்றன என்பதை
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என மகாகவி பாரதியார் பாடியது போல உலகப் புகழ் பெற்று எக்காலத்திற்கும் ஏற்ற அரிய பலக் கருத்துக்களை கொண்ட வாழ்வியல் இலக்கிய நூல்களாக இன்றளவும் திகழ்கின்றன. இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள கல்வி, நட்பு என்ற அதிகாரங்களின் கருத்துக்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் இயற்கை கூறுகள்
- ஜெ. விஜி
- கு. கண்ணன்
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க காலத்தில் அகப்பாடல்களில் இயற்கையை விரிவாகப் பாடியுள்ளன. மனிதர்களுடைய காதல் உணர்வைப் பாடுவதற்கு இயற்கை சங்கப் புலவர்களுக்கு உதவியது. பின்னால் அறநூற்கள் பெருகிய போது இயற்கையைப் பாடுவது நின்று போனது. சமண, பௌத்த சமயம் மேலோங்கிய துறவறமும், அறக்கோட்பாடுகளும் வலியறுத்தப்பட்டன. அப்போது இயற்கையை இரசிப்பது, வாழ்க்கையை மிகழ்வோடு வாழ்வது, கலைகளைத் துய்ப்பது என்பன சிற்றின்பத்தூண்டல் என்பதால் விலக்கப்பட்டன. இச்சூழலல், பழைய தமிழ் மரபுகளை மீட்டெடுத்துப் போற்றிப் பாடினார். இயற்கையில் இறைவனைக் காண்பதை, மக்களிடையே தம் கவிதை மூலம் பரப்பினார் இறைவன் அருள் அனுபவத்தைத் தமிழ் அக மரபில் கடவுளை காதலாகப் (பகவத் காமம்) பாட, இயற்கையையும் அஃறிணை உயிர்களையும், கவிதைக்குப் பின்னணியாக்கினார்.
Diasporic Dilemmas and Intergenerational Conflict in Channa Wickremesekera’s Distant Warriors
- U. Thulasivanthana
- March 3, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
The word ‘diaspora’ comes from the Greek term diaperio. Historically, the meaning of the term ‘diaspora’ indicates a number of concepts related to religion, dispersion, ethnic minority groups, migration, etc. The Sri Lankan diaspora is a significant diaspora group in the globe. The Sri Lankan diaspora includes of the following diaspora communities such as the Sinhala diaspora, the Tamil diaspora, the Burgher diaspora and the Moor diaspora. Numerous journeys from Sri Lanka account for the Sri Lankan diaspora communities. Religious and cultural links, need for economic growth, career opportunities, adverse effects of political and religious insurgencies, demands for skilled workers, and ethnic conflict have contributed to the creation of the Sri Lankan diaspora communities. Currently, there has been a heightening concern in the idea of intergenerational relationship in diaspora families, which are repeatedly portrayed as combat zones between the first generation parents and the second generation children. Intergenerational relationship in diaspora families seems to reflect on intergenerational conflict with regard to the divergent expectations of the old world parents and their new world children. This qualitative and descriptive study attempts to explore the intergenerational conflict that burgeons in Channa Wickremesekera’s Distant Warriors.
பஞ்சமர் நாவல் காடடும் விளிம்புநிலை வாழ்வியல்
- க. மகாலெட்சுமி
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பன்னெடுங்காலமாகப் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உட்பட்டு இன்னலுற்று வாழும் பஞ்சமா் என்று கூறப்படும் மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கி எழுதப்பட்ட நாவல் பஞ்சமர்.சாதி அடக்கு முறையால் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்காக கே.டானியல் அவர்களால் எழுதப்பட்ட நாவலே பங்சமராகும்.எல்லோருக்குமான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தல் என்ற அடிப்படையிலும் வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டு நிமிர்ந்து நின்று நில ஆதிக்கக்காரர்களால் சுமத்திவைக்கப்பட்டிருக்கும் நுகத்தடியை உடைத்தெறிய வேண்டுமென்ற வேட்கையிலும் எழுதப்பட்ட இந்நாவலில் பஞ்சமர் மக்களின் விளிம்புநிலை வாழ்வியலைச் சுருக்கமாக விரித்துரைக்க முற்பட்டுள்ளது இக.கட்டுரை.
மதுரை இளங்கவின் படைப்புகளில் பெண்கள்
- ஜோ பிரின்ஸ்
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பண்டைக் காலத்தில் பெண்கள் பெருங்கல்வியாளர்களாக, ஆட்சியாளர்களாக எதனையும் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர்களாய் இருந்தனர். சான்றாக வெள்ளிவீதியார், ஒளவையார், கோப்பெரும் பெண்டு, பாண்டிமாதேவி முதலானவர்கள் சங்க காலத்தில் போற்றுதலுக்குரியவர்களாக இருந்தனர். பெண்கள் காலப்போக்கில் தங்களது உரிமைகளை இழந்தனர். சமுதாயத்தில் நிலவிய ஆணாதிக்கப் போக்கால் பெண்கள் தாழ்நிலை அடைந்தனர். பெண்களை ஒடுக்கியே இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பெண்ணுடல், பெண்ணியம், பெண்மையை இழிவுபடுத்தல், வெறுத்தல் போன்ற நிலையில் பெண் பற்றியப் பதிவுகள் இலக்கியத்தில் காணப்பட்டன. மதுரை இளங்கவின் தனது படைப்புகளில் பெண்ணின் பெருமையைப் போற்றியுள்ளார். அன்பு, கருணை, பொறுமை, தியாகம், இரக்கம், பொதுநலத்தொண்டு எனப் பெண்மைக்குச் சிறந்த வரையறைத் தரும் வகையில் தனது படைப்புகளில் பெண்களை மதுரை இளங்கவின் படைத்துள்ளார்.
ஐங்குறுநூறு - ஓர் முன்பழந்தமிழ் இலக்கியம்
- தி. மோகன்ராஜ்
- க. திலகவதி
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மொழியானது காலந்தோறும் மாறிவரும் தன்மையை உடையது. இந்த மாற்றங்களை அவ்வக் காலங்களில் எழும் இலக்கணங்கள் முறையாகப் பதிவுசெய்கின்றன. தொல்காப்பியம் விளக்கும் தமிழ்மொழியின் அமைப்பு நன்னூல் விளக்கும் தமிழ்மொழியின் அமைப்பிலிருந்து பல வகைகளில் மாறுபட்டுள்ளது. உடம்படுமெய்கள் யாவை என்பதைத் தொல்காப்பியம் விளக்கவில்லை(தொல்.எழுத்து.141). ஆனால், நன்னூல் உடம்படுமெய்கள் யாவை என்பதை விளக்கி அவற்றின் வருகை இடத்தையும் குறிப்பிடுகிறது(நன்.162). தன்மை ஒருமைப் பெயராகத் தொல்காப்பியம் 'யான்' என்பதைக் குறிப்பிடுகிறது(தொல்.சொல்.159); ஆனால், நன்னூல் 'யான்' என்பதுடன் 'நான்' என்பதையும் குறித்துள்ளது(நன்.285). தன்மை இடத்தைத் தொல்காப்பியம் உயர்திணைக்கு உரியதாகக் குறிப்பிட்டுள்ளது(தொல்.சொல்.159); ஆனால், நன்னூல் அதனை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவானதாகக் கருதுகிறது(நன்.285). வினையெச்ச வாய்பாடுகளில் செயற்கு என்னும் வினையெச்ச வாய்பாடு தொல்காப்பியத்தில் இடம்பெறுகின்றது(தொல்.சொல்.223). ஆனால், நன்னூலில் அது குறிப்பிடப்படவில்லை. மாறாக, வான், பான், பாக்கு போன்ற வினையெச்ச விகுதிகள் நன்னூலில் சுட்டப்பட்டுள்ளன(நன்.343). இவ்வாறு, மொழியில் புணர்ச்சி முதல் பெயர், வினைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அவ்வக்கால இலக்கணங்கள் பதிவுசெய்துள்ளன.
இறையன்பு கவிதைகளில் பெண்ணியம்
- க செல்வராஜ்
- சி ப்ரியா
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக அரசியல், பொருளாதார நடைமுறைகள் , கட்டமைப்புகள் மற்றும் சமத்தவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள் , கோட்பாடுகளின் தொகுப்பாகும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு. சமத்துவமின்மையின் மூலங்கள் சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள் , பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையளங்களான ஆண் , பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உண்டு. தற்கால பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை இன சமூக கலாசார, மத எல்லைகளைக் கடக்கும் அடிப்படை இயக்கமாகக் கருதுகின்றனர். இவ்வாறாக பெண்ணியம் குறித்தான கருத்தாக்கங்களில் இறையன்பு கவிதைகள் இடம் பெறுவதை உணர்த்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழ் இலக்கியங்களில் பெண்களின் பாவை விளையாட்டு
- இரா. பிரியதா்ஷினி
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பழங்காலத்தில் மனிதன் தன்னைக் காத்துக் கொள்ள கையில் கிடைத்தவற்றை வைத்துக்கொண்டு போராடினான். அப்பொழுது அவன் பெற்ற பயிற்சி அவனது வீரத்தைப் புலப்படுத்த வகை செய்தது. இவ்வீரத்தோடு மனமகிழ்ச்சியும் சேர்ந்து வீரத்தை வளர்க்க, பொழுதுபோக்கை வரவேற்க எனப் பல நிலைகளில் விளையாட்டுகள் தோன்றின. இவை அந்தந்த மக்களின் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் தன்மையில் அமைந்துள்ளன. இதில் பெண்களுக்கான விளையாட்டுகளுள் ஒன்றான பாவை விளையாட்டை இலக்கியங்களின் வழி எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இலக்கியப் பதிவுகளில் இடம்பெறும் கோவில்களின் சிறப்பு
- சு. காந்திதுரை
- சு. தனலெட்சுமி
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க காலத்தில் முறையோடு வகுத்து தொகுக்கப்பட்ட மனை நூல்கள் இருந்ததெனச் சங்க இலக்கியங்கள் முலம் அறிகிறோம். “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் மயன் பண்டிழைத்த மரபினது தான்”1 சிலப்பதிகாரம் மயமுறையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. கோயில்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியம் விரித்துக் கூறுகின்றன. அவை, புறநானூற்றுப் பாடல் ஒன்று சங்க காலத்தில் ‘முக்கட் செல்வனாகிய சிவபிரானுக்கு’ அமைந்த கோயிலைக் குறிக்கின்றன. இன்னப் பிறகோவில்கள் ஆறுமுகம், பலராமன், திருமால் போன்ற தெய்வங்களுக்கு காவிரிப்பூம்பட்டினத்தில் கோயில்கள் அமைந்திருந்ததைச் சிலப்பதிகாரத்தில் அறியப்படுகின்றன. அன்பு நெறியை வளர்க்க சைவசமய அடியார்கள் உழைத்தனர் கடவுள் மனிதர்களோடு தன்னை ஈடுபடுத்துகிறார் என்பதை உணர்த்த கீதையில் கிருஷ்ணனுடைய அவதாரம் விளக்கப்படுகின்றன. கி.மு.1500 ஆண்டு அளவில் ஆரியர்கள் என அழைக்கப்படும் ஒரு குழுவினர் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து நாடோடிகளாக ஆடு மேய்ப்பவர்களாக இந்தியாவின் வடபகுதியில் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய சமய வழிபாடு பலவகைக் கடவுளைக் கொண்டதாக சங்க இலக்கியத்தின் வாயிலாக நாம் அறிகின்றோம். சான்றாக சங்ககால இலக்கியங்களிலும் சமகால இலக்கியங்களிலும் இறைவழிபாடுகள் இருந்து வருவதை இக்கட்டுரை மூலமாக அறியப்படுகின்றன.
கிடை புதினம் காட்டும் இடையர் இன மக்களின் வாழ்வியல்
- சு. ரேணுகா தேவி
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது எனப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இத்தகைய சிறப்பு பெற்ற கி.ராஜநாராயணனின் கிடை புதினத்தை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது,
சங்க இலக்கியத்தில் வையையின் சிறப்பு
- வெ. முத்துலட்சுமி
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்க இலக்கியத்தில் உள்ள வையையின் சிறப்பு குறித்து பரிபாடல் வழியின் மூலம் இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. திருவிளையாடற்புராணத்தில் தலவரலாறு எடுத்துரைக்கும்போது வையையின் நீர் மேலாண்மை மற்றும் மதுரை மக்களின் வாழ்வாதாரத்திற்கு இவ்வையை துணைபுரிகிறது. இவ்வையை நீர்வரத்தால் மதுரை மாநகர் மக்கள் மகிழ்வோடு விழா நடத்தும் காட்சியை இலக்கியம் மிக அழகாக எடுத்துரைக்கிறது.
அறஇலக்கியங்கள் காட்டும் அறச்சிந்தனைகள்
- ச மாசிலா தேவி
- Feb. 23, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
உலக இலக்கியங்கள் யாவும் அவை தோன்றிய நாட்டின் பண்பாட்டையும் வரலாற்றையும் வகுத்தும் தொகுத்தும் காத்தும் வருகின்றன. மேலும் அந்தந்த நாட்டு மக்களின் வாழ்க்கை நலத்தினைஅறிந்துகொள்வதற்கும் உறுதுணையாக அமைகின்றன. மக்களுக்கு இலக்கணம் கண்ட பெருமை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. பிறமொழிகளுக்கு இத்தகைய நிலையில்லை. மக்கள் வாழ்க்கையில் இயல்புகளையும் பிற செய்திகளையும் கூறுவதைத் தமிழ் இலக்கியங்கள் தலையாய பணியாகக் கொண்டுள்ளன. தமிழ்மொழி அகத்தையும் புறத்தையும் இருகண்களாகக் கொண்டது. சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள் வரை அறத்தைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளன. இவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் அறக்கருத்துக்களை எடுத்துக்கூறினாலும் சங்கமருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் அறத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு விளங்கியுள்ளன.
தமிழ்க் காப்பியங்களில் அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு அணுகுமுறை (அறிவுசார் கவிதை அமைப்பு)
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
கல்வி உளவியலாளர்கள் மனிதனின் கற்றலும் கற்றல் விளைவுகளையும் மூன்று நிலைகளில் பிரித்துள்ளனர். அவை அறிவாற்றல் (cognitive domain) உணர்ச்சி (affective domain) மற்றும் உடல் அசைவு (psychomotor domain) ஆகியவை ஆகும். இந்த மூன்று நிலைகளில் கலவையே விலை பயன்மிக்க கற்றலை உருவாக்குகிறது Bloom, 1956; Krathwohl; Simpson, 1972). கற்றலுக்கு உகந்த இந்த மூன்று நிலைகளை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) என்று அழைத்து வந்தனர் என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அமைகின்றது. இதனைக் கீழ்காணும் வரைபடம் வழி காணலாம்.
பாலகுமாரனின் ‘துணை’ப் புதினத்தில் உறவுநிலைச் சித்தரிக்கப்பட்ட விதம்
- பா. செண்பகா
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பாலகுமாரனின் ‘துணை’ என்னும் புதினத்தில் காணப்பெறும் உறவுகளைப் பற்றிக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது. துனிமனிதன் பிறரிடம் கொள்ளுகின்ற உறவின் நெருக்கமும், விலகலும் பற்றி எடுத்துரைப்பதாக அமைகின்றது. கணவன் - மனைவி, தந்தை – மகன், தாய் - மகள், மாமியார் - மருமகள், உடன்பிறப்பினர் உறவு, நட்புறவு போன்ற உறவு முறைகளில் தோன்றும் சிக்கல்களையும் அவற்றிற்குரிய காரணங்களையும் காணலாம்.
சங்க இலக்கியத்தில் நகரம் பற்றிய செய்திகள் (ஆற்றுப்படை இலக்கியங்களை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு)
- சிவராசா ஓசாநிதி
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்ககாலம் தொடர்பாக கீழடி அகழாய்வுகள் தற்பொழுது முதன்மை பெற்று வந்துள்ளன. அந்தவகையில் கீழடி அகழாய்வுகள் தமிழகத்தில் நகரங்கள் இருந்தன என்பதை உறுதி செய்துள்ளது. இதனை பின்வரும் கூற்றுக்கள் உறுதி செய்துள்ளன. 'தமிழகத்தில் 2m ஆழத்தில் கிடைத்த பொருட்களின் கார்பன் கணிப்பு அதன் காலத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என உறுதிசெய்துள்ளன'(2017, Amaranath Ramakrisna). அதேபோன்று அ. இராமசாமி 'தொன்மைத் தழிழர் வரலாறு' என்னும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார். தமிழகத்தில் 6.5 m ஆழம் வரை அகழாய்வு செய்ய வேண்டியயுள்ளதால் அதன் காலம் கி.மு 1500 வரை போகும் எனக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் மூன்று இடங்களில் செம்பு உணர் கொம்புடைய வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை கி.மு 2000 முதல் 3000 வரை பழமை வாய்ந்தவை' (இராமசாமி,அ., 2013 பக்: 63-64). இதனடிப்படையில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள கீழடி அகழாய்வுகளின் ஊடாக நகரம் இருந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இவ் நகரம் பற்றிய செய்திகள், தலைநகரம் பற்றிய செய்திகள் மற்றும், துறைமுக நகரங்கள் பற்றிய செய்திகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை ஆராயும் நோக்கில் இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. அத்தோடு இவ்வாய்வானது பொருநராற்றுப்படை(ஆய்வின சுருக்கம் கருதி) தவிர்ந்த ஏனைய திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய மூன்று ஆற்றுப்படை இவ்விலக்கியங்களின் செய்யுட்கள் மற்றும் உரைகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கியும் பகுப்பாய்வு நோக்கிலும் அமைந்துள்ளது.
நற்றிணையில் உரையாடல் (கூற்று)
- க. செல்வராஜ்
- பா. சிவசங்கரன்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
ஓர் இனத்தின் பண்பாட்டு வளர்ச்சி அதன் எண்ணச் செழிப்பை அளவுகோலாகக் கொண்டு மதிப்பிடலாம். சங்க இலக்கியங்கள் அகம் புறம் என்னும் பொருள் அடிப்படையிலும் மாந்தர் கூற்று முறையிரும் அமைத்துப் பாடப்பெற்றவை. கூற்று முறையில் அகப்பாடல்களைப் பாடும்போது சங்கப் புலவர்கள் பல வகையான உத்தி முறைகளைக் கையாண்டுள்ளனர். அக இலக்கியங்களில் பலதரப்பட்ட மாந்தர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் கூற்றுக்குரிய அகமாந்தர்களையும் யாருடைய கூற்றில் புறக்கூறு வெளிப்படுகிறது? போன்றவற்றை ஆராய்வது மிகவும் தேவையானதாகும். அகமாந்தர் கூற்றுகள் இலக்கியச் சுவையை மிகுதியாக்கி நாடகப்பாங்கினை உணர்த்தி நிற்கின்றவை இக்கூற்றுகளில் வெளிப்படும்.
கூளமாதாரியில் சமூகச்சிந்தனை
- சா சகுபா்நிசா
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இலக்கியம் என்பது பல்வேறு பரிணாமங்களை உடையதாகும். பல்வேறு இலக்கிய வகைகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ்மொழி எனில் மிகையன்று. இக்காலத் தமிழ் இலக்கிய வகைமைகளில் புதினம் சிறப்பிடம் காரணம் வரலாறு, சமூகம், பண்பாடு போன்றவை சார்ந்த பதிவுகளை வெளிப்படுத்தும் சமூக நிலைக்களமாக, சமகால நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாக விளங்குகிறது.
இத்தகைய புதின இலக்கிய மரபில் செம்மாந்த பதிவுகளை தமக்கே உரிய மொழி நடையில் இவ்விலக்கிய உலகிற்கு வழங்கி வரும் படைப்பாளர்களுள் “பெருமாள்முருகன்” குறிப்பிடத்தக்கவராவார். இவரது பல்வேறு புதினங்களில் “கூளமாதாரி" எனும் புதினத்தில் இடம்பெறும் சமுதாயச் சிந்தனை குறித்து ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
கலித்தொகையில் தொழிற்பெயர்கள்
- ரா. பிரபா
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இலக்கணச்சொல் வகைகள் நான்கனுள் முதலில் தோன்றுவது பெயர்ச்சொல். இப்பெயர்ச்சொல் வகைகளில் ஒன்று வினைப்பெயர்கள் (drived nouns). தமிழில் பெயர்கள் பெரும்பாலும் வினைச் சொற்களிலிருந்தே தோன்றுகின்றன. பெயர், வினை ஆகியவற்றின் இயல்பை ஒருங்கே பெற்று வருவனவற்றை தொழிற்பெயர் எனவும், வினையாலணையும் பெயர் எனவும் குறிப்பர். இவை, ஆக்கப்பெயரில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தொழிற் பெயர்கள் வினையிலிருந்து விகுதிகளைப் பெற்று தோன்றுவதால் இவ்வியல்பினைப் பெற்றது.
இளங்கோவடிகளின் மாண்பும் பாவலரின் கவித்திறனாய்வும்
- ந. பிரகாஷ்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இன்றைய அவசர உலகில் உணர்வுகளுக்கு இடம் இலக்கியம் மக்களின் வாழ்வியல் விளைச்சல். மக்களின் வாழ்வியல் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு இலக்கியங்கள் பல்கிப் பெருகி வருகின்றன. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியால் மனிதனின் சிந்தனைகளும் புதிய போக்குகளின் வடிவங்களாக வளர்ச்சி பெறுகின்றன. படைப்பாளன் படைக்கும் இலக்கியங்களின் எண்ணங்கள் நவீனத்துவம் பெற்று விரிவடைகின்றன. இலக்கியத்தின் உயிர்நாடியாகத் திகழ்வன உணர்ச்சிகளாகும்.
திருவருளாகிய பரிசில்
- ச. பாலமணிகண்டன்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
காலப் பழமையும் செவ்வியல் தன்மையும் ஒருங்கே கொண்ட சங்க இலக்கியத் தொகுப்பில் நீண்ட பாடல்களைக் கொண்டது பத்துபாட்டு. அதனுள் முதலாவதாக அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை மற்ற ஆற்றுப்படை பனுவல்களைக் காட்டிலும் வேறுபட்டது. அத்துடன் இந்நூலானது பக்திப்பனுவல் போன்று விளங்கும் தன்மையால் தொகுப்பாக தனிப்பனுவலாக என பலப்பதிப்புகளையும், பல உரைகளையும் பெற்ற தன்மையது. அவ்வாறான திருமுருகாற்றுப்படை உரைகளில் நச்சினார்க்கினியர், பரிப்பெருமாள், பரிமேலழகர், பரிதியார் ஆகியோரின் உரைகள் குறிப்பிடத்தக்கன. இவ்வுரைகளோடு இருபதாம் நூற்றாண்டிலும் இத்திருமுருகாற்றுப்படைக்கு பல உரைகள் எழுந்தன. நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி ஆறுமுக நாவலர் எழுதிய புத்துரை, கட்டுரை வடிவமாக கி.வா. ஜகன்நாதன் எழுதிய திருமுருகாற்றுப்படை விளக்கம், பழைய உரையாசிரியர்கள் ஐவரின் உரையைத் திறனாய்வு செய்து திருமுருகாற்றுப்படை உரைத்திறன் எழுதிய கு. சுந்தரமூர்த்தியின் உரை என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இருப்பினும் கருத்துச் செறிவோடு இலக்கண விளங்ககங்களை நயத்தோடு எடுத்துக்காட்டும் திறமும் ஒருங்கேக் கொண்ட உரையாசிரியரான ஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படை உரைத்திறனைக் இக்கட்டுரை எடுத்துரைக்க முற்படுகிறது.
கம்பராமாயணத்தில் அறவியல்
- சி. பரமேஸ்வரி
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் வாலிவதைப் படலத்தில், வாலியைக் கொன்று வானரப் படைகளை ஒன்றுசேர்த்து சீதையின் இருப்பிடத்தை அறிவது தக்கதென்று அனுமன் கூற இராமன் இசைகிறான். இராமன் சுக்கிரீவனை நோக்கி, ‘நீ வாலியைப் போருக்கு அழைத்து வந்து அவனோடு பொருதிய நிலையில் யான் மறைந்து நின்று வாலி மேல் அம்பு எய்து கொல்வது தக்கதென்று கருதுகின்றேன் என்கிறான். சுக்கிரீவனும் அதற்கிசைகிறான். வாலியும் சுக்கிரீவனும் கடும்போர் புரிகின்றனர். முடிவில் சுக்கிரீவன் வாலியொடு நிற்கலாற்றாது வருந்திய நிலையில் இராமனை அடைகிறான். சுக்கிரீவனின் துயர்நிலைக்கு இரங்கிய இராமன், அவனை நோக்கி நீ வருந்தாதே, நீயும் வாலியும் உருவத்தாலும் நிறத்தாலும் ஒத்த தோற்றமுடையவராக இருத்தலால் வாலியைத் தெரிந்து அவன்மீது அம்பு எய்ய முடியாமல் போயிற்று. நீ கொடிப்பூ மாலையை அடையாளமாகr; சூடிச் செல்க என்று கூற, சுக்கிரீவனும் அவ்வடையாள மாலையைச் சூடிச் சென்று வாலியுடன் கடும்போர் புரிகிறான். வாலி> சுக்கிரீவனை நிலத்தில் மோதிக் கொல்லுதற்கு மேலே தூக்கிய போது இராமன், அம்பு எய்திய நிலையில் வாலியின் மார்பில் mk;G தைத்தது. தன்மீது அம்பு எய்தியவன் இராமன் என்பதை அறிந்த நிலையில் நிலைபெற்ற அறத்தின் வேலியை அழித்துவிட்டாயென்று வெகுண்டு பேசுகிறான். பிறகு இராமன், வாலியிடம் நின் தம்பி சுக்கிரீவனின் மனைவியை வலிதிற் கவர்தலாகியj; தீச்செயலைச் செய்யத் துணிந்தமையாலும் நின்னால் துன்புறுத்தப்பட்டு என்னைத் தஞ்சமடைந்து உயிர்போலும் நட்பிdd; ஆயினமையாலும் உன்னைக் கொன்று உயிர்கவர்ந்தேன் என்று கூறும் நிலைகளில் பல்வேறு அறக்கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி அறிவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
அறிவியல் பார்வையில் சங்க இலக்கியமும் சமகால இலக்கியமும்
- வி. தேவி
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
உயர்தனிச் செம்மொழி என்று போற்றப்படும் தமிழ் மொழியானது, சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழியாகும். ஞால முதல் மொழி, திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி, மிகப்பழமையான செம்மொழி என்ற சிறப்புக்குரியது.தொன்மை, முன்மை, எளிமை, இளமை, வளமை, தாய்மை, செம்மை, மும்மை , தனிமை, இனிமை , பெருமை, திருமை, இயன்மை, வியன்மை ஆகிய செவ்வியல் தன்மைகளைக் கொண்டதால் தமிழ் மொழி செம்மொழி எனும் உயர்ந்த உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. இயல், இசை, நாடக எனும் முப்பெரும் பிரிவுகளை உள்ளடக்கி முத்தமிழ் என்னும் பெயரையும் பெற்றது. அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த மொழியாகும். சங்க இலக்கியங்கள் 26 ஆயிரத்து 350 அடிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வேறு எந்த மொழிகளிலும் இந்த அளவு அடிகள் கொண்ட இலக்கியங்கள் உருவாக்கப்படவில்லை என டாக்டர் கபில் சுவலபில் கூறுகின்றார். 473 புலவர்களால் 2381 பாடல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் பைந்தமிழனின் அன்றாட வாழ்க்கை முறைகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தொன்மையான, உயிரோட்டமுள்ள, அறிவியல் சிந்தனைகள் கொண்ட ஆக்கப்பூர்வமான கருத்தியல்கள் சங்க இலக்கியத்தில் மிளிர்வதை காணமுடிகின்றது. அறிவியல் பார்வையில் சங்க நூல்களையும் சமகால நூல்களையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலக்கியங்களில் சமூக பண்பாட்டுக் கூறுகள் ஒரு பார்வை
- க. தேவசேனா
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
தமிழ் இலக்கியம் ஒரு நீண்ட நெடிய பரப்புடையது. காலந்தோறும் புதிய புதிய இலக்கியக் கோட்பாடுகளைக் கொண்ட இலக்கிய வகைகள் தோன்றுகின்றன. பல்வேறு வகைகள் தோன்றுகின்றன. இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவே படைக்கப்படுகிறது. மேலும் நம் மரபு மாறாமலும் பண்பாடு மீறாமலும் படைக்கப்படுகிறது. சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழும் இலக்கியப் படைப்பாளிகள் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் தங்கள் படைப்புகளில் தொய்வின்றி தந்த வண்ணம் உள்ளனர். அப்படைப்புகளின் வடிவம் மாறுகிறதே தவிர பொருண்மையானது மனிதனையும் அவனது வாழ்வியலையும் பண்பாட்டையுமே பாடுபொருள் ஆக்குகிறது. பண்பாட்டுக்கூறுகள் சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாமல் சமகால இலக்கியங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது. சமகால இலக்கியங்களின் கருத்துக்களம் புதுநோக்கோடு சென்றாலும் பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்யும் இடங்களில் சங்க இலக்கியங்களுடன் தொடர்பு உடையதாகவே காணப்படுகிறது. இவற்றை ஆராயும் நோக்கத்துடனேயே இக்கட்டுரை நோக்கப்படுகிறது.
சங்ககால தமிழிசை மரபில் பண்கள்
- தங்கராசா வாகீசன்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
உலக தொடக்கத்தை முதலில் கணிக்கும் சங்ககாலத்தை கி.பி. 01 – 03 நூற்றாண்டாக வகைப்படுத்துகி;ன்றான் நம் சான்றோன். அவன் வாழ்ந்து வளர்த்த பண்டைய தமிழ் இன்னும் சிறப்புடன் இருக்க காரணம் அதனுள் இருக்கும் இசையே. இசை ராகங்களால் உருவானது ராகத்தின் அடித்தளமே பண் ஆகும்.
“பண் என்பது பாடல்களில் அமைந்துள்ள இசையின் முறை நிலை” ஆகும் பண் என்பதற்கு அமைவு, சீர், தகுதி, நிந்தை, வீணை, ஊழியம், படுகுழி, மகளிர்கூட்டம் என பல பொருள்கள் அகராதியில் தரப்பட்டிருந்தாலும் “ஒலியானது செம்மையான முறையில் பாடலில் பொருந்தியுள்ள நுட்ப உணர்வால் அடையாளம் காணத்தக்க நிலையில் ஒலியுருவங்களாக அமைவதே” பண் ஆகும்.
இவ்வாய்வு கட்டுரை எழுதுவதன் நோக்கமானது சங்க பாடல்களில் எவ்வகையான பண்கள் எந்த சூழலில் மக்களின் வாழ்வியலோடு இணைந்து காணப்பட்டது என்பதையும் எவ்வாறு இசை தோன்றினாலும் அனைத்து இசை வகைகளிற்கும் தாய் இசையானது தமிழ் இசை என்பதனையும் கட்டுவதுடன் தமிழ் இசையின் ஆணிவேர் பண்கள் என்பதை தற்கால சமூகத்தினருக்கு எடுத்து இயம்பும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
சங்ககால தமிழ் இசைமரபில் நிகழ்த்துகைக் கலைஞர்கள்
- தங்கராசா கோபிநாத்
- ரெ. எழில்ராமன்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சங்ககங்கள் அமைத்து தமிழையும்இ தமிழிசையையும் வளர்த்த காலம் சங்க காலம் எனப்படுகின்றது. இக்காலத்தில் நிகழ்த்துக்கலைகலைகள் ஏராளமாக காணப்பட்டன. (இசை, கூத்து, வாத்தியம் வாசித்தல்) மக்கள் மனமகிழ்ந்து இரசிக்கும் நுட்பத்துடன்கூடிய மனித செயற்பாடுகள் நிகழ்த்துகைக் கலைகள் எனப்படுகின்றன. சங்க காலத்தில் நிகழ்த்துகை கலைகளை நிகழ்த்தியோர் நிகழ்த்துகைக் கலைஞர்கள் ஆவர். இவர்கள் பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு நிகழ்த்துகை கலை வடிவங்களை நிகழ்த்தக்கூடியவர்கள் ( அதாவது ஒரு சங்ககால நிகழ்த்துகைக் கலைஞர்கள்; பாடல், ஆடல், நடித்தல், இசைக்கருவிகளை திருத்தி வடிவமைத்தல்) என்பதனை இளஞ்சமுதாயத் தினருக்கும் அறிவிப்பதனை ஆய்வு நோக்காகமாகக் கொண்டுள்ளது. அத்துடன் வரலாற்று ஆய்வு, விபரண ஆய்வு, சமுகவியல் ஆய்வு போன்ற ஆய்வியல் முறையியல்கள் ஊடாக ஆய்வுக்கட்டுரை எழுதபட்டுள்ளது.
சீறாப்புராணத்தில் விலங்குகளின் இறையுணர்வு
- செ. சிராஜூதீன்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
- DOI: 9
-
Abstract
உலகில்எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன.ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன.மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான்.ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.
மரபுக்கவிதைகளில் வாழ்வியல் சிந்தனைகள்
- ப. செந்தில் முருகன்
- பெ. இளையாபிள்ளை
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள். என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் பாவேந்தர் பாரதிதாசன். அத்தகு தொன்மையும் தாய்மைத்தன்மையும் கொண்ட செவ்வியல் மொழியான தமிழ்மொழியின்கண் சங்ககாலம் முதல் சமகாலம் வரை பண்பட்ட இலக்கண, இலக்கியப் படைப்புகள் வற்றா நதிபோல் ஊற்றெடுத்து வருகின்றன. இவற்றுள் பெரும்பாலான தமிழ் இலக்கியப் படைப்புகள் வாழ்வியல் சிந்தனைகளை அடியொற்றியே சிறப்புறப் படைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியந்தொட்டு இன்றளவும் மரபுக்கவிதைகள் இயற்றுவதில் பல புதிய யாப்பியல் மரபு தோன்றியிருப்பினும், வெண்பா, ஆசிரியப்பா, விருத்தப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற இலக்கண வரம்பிற்குட்பட்டு இயற்றப்படும் மரபுக்கவிதைகளுக்கு இன்றளவும் சிறப்பிடமே வழங்கப்பட்டு வருகிறதெனில் அது மிகையாகா. யாப்பின் விதிமுறை வளர்ச்சியோடு எழுத்திலக்கண வளர்ச்சி, அசை இலக்கண வளர்ச்சி, சீர் இலக்கண வளர்ச்சி, தளை இலக்கண வளர்ச்சி, அடி இலக்கண வளர்ச்சி, தொடை இலக்கண வளர்ச்சி போன்றவை ஏற்பட்டு அவை யாப்பருங்கலக் காரிகைக்குப் பிற்பட்ட காலத்தில் குறிபிடத்தக்க நிலையினை எய்தி, யாப்புறுப்புகள் அழகுற அமையும்படியும் பாக்களுக்கும், பாவின் இனங்களுக்கும் வகுக்கப்பட்டு அதன் இலக்கண மரபில் பிறழாமலும் இயற்றப்படும் மரபுக்கவிதைகளில் வாழ்வியல் சிந்தனைகள் வேரூன்றி கிடக்கின்ற. அத்தகுச் சிறப்புமிகு மரபுக்கவிதை இலக்கணங்களுள் குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா, அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் ஆகிய இலக்கணங்களுக்கு உட்பட்டு காணப்படும் வாழ்வியல் சிந்தனைகளை மட்டும் தொகுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கப் பொருளாகும்.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறச்சிந்தனைகள்
- கி. சாந்தினி
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்வியலைப்பாடு பொருளாகக் கொண்டு உருவாக்கப் பட்டவைகளே சங்க இலக்கியங்கள். சமுதாயம் ஒப்புக் கொண்ட பழக்க வழக்கங்களையும் நடைமுறை நெறிமுறைகளையும் மக்கள் வாழ்விற்கு உகந்தவை என்ற நிலையில் நம் முன்னாகள் அவற்றை அறங்களாக வரையறை செய்துள்ளனர். வழிப்போக்கர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அருமையான பாதையைப் போல, வாழ்க்கைப் பயணம் தங்குதடையின்றி செல்ல நம் சான்றோர்கள் காட்டிய நெறிமுறையே அறம் எனப்பட்டது. அறம் என்ற இச்சொல்லின் தொன்மையை,
”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கின்”
என்ற தொல்காப்பிய அடிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். நம் சங்க இலக்கியங்கள், மனித வாழ்வின் உயர்விற்குப் பயன்படும் உயரிய அறக் கருத்துக்களை எவ்வாறு எடுத்துரைக்கின்றன என்பதை எடுத்துரைப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.
நெய்தல் நில மக்களின் வாழ்வியல் போராட்டங்கள்
- ஜெ. சவிதா
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சு.தமிழிச்செல்வியின் மாணிக்கம், ஆறுகாட்டுத்துறை ஆகிய புதினங்களில் மீன்பிடித் தொழில் பற்றியும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும்; மீனவர்கள் பற்றியும் மிக விரிவானதொரு பதிவுகளைக் காண முடிகின்றது. கடல் கடந்து சென்று மீன்பிடித்து வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் போன்றே பெண்களும் அதனை விற்பனை செய்வதில் பல சிக்கல்களைச் சந்திக்கின்றனர். மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் ஆண்கள் எடுத்து வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்றவாறு குடும்பம் மேற்கொள்வதும், மீன்பிடித் தொழில் இல்லாத காலங்களில் குடும்பம் மேற்கொள்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் மாணிக்கம், ஆறுகாட்டுத்துறை நாவல்களில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். மாணிக்கம் நாவலில் மாணிக்கம் தன் மகனை மீன்பிடித் தொழிலில் இருந்து மாற்றுத் தொழிலுக்கு மாற்ற நினைக்கிறார். ஆறுகாட்டுத்துறை நாவலில் சிங்காரவேலு நாட்டார், விசைப்படகு வாங்கிவிட்டு ஆறுகாட்டுத்துறை மக்களுக்கு மீன்பிடித் தொழிலில் புதிய நுட்பங்களைக் கற்றுத் தருகிறார். எனவே, மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் மரபினால் போதுமான பொருளாதாரத்தை ஈட்ட முடியாமலும், பொருளாதார வசதி இன்மையால், புதுமையான தொழில் கருவிகளை எட்ட முடியாமல்; தடுமாற்றம் கொண்டு வாழும் நிலையை ஆசிரியர் உணர்த்துகிறார்.
திரையிசைப் பாடல்களில் சங்க இலக்கியத்தின் செல்வாக்கு
- க. சேகர்
- தா. சரவணன்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
தமிழ் இசையோடு பிறந்து வளர்ந்த மொழியாகும். தமிழர் வாழ்க்கையானது பாடல்களோடு பின்னிப்பிணைந்துள்ளது. தமிழர்கள் இசைவளம் பெருக்கி வாழ்ந்த வரலாற்றினை தொல்காப்பியம், சிலப்பதிகாரம் மற்றும் பக்தி இலக்கியம் வாயிலாக அறிகிறோம். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூவகை பிரிவும் ஒருங்கே அமைந்து வளர்ந்திருப்பது தமிழ்மொழிக்கே உரியத் தனிச்சிறப்பாகும். அந்த வகையில் இசைச் செழுமையை இன்று வரையில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நூல்களில் சங்க இலக்கியம் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. தமிழிசை மரபும் நல்வாழ்வியலோடு இசையையும் பாடல்களையும் நம்மைவிட்டுப் பிரிக்க முடியாத வகையில் இணைத்துள்ளன. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை பாடுகிறான், பாடல்களைக் கேட்டு இன்புறுகிறான். தாலாட்டு, விளையாட்டு, தெம்மாங்கு, கும்மி, ஒப்பாரி எனப் பல்வேறு பெயர்களை அதற்குச் சூட்டி மகிழ்கிறான். இவ்வகையில் சங்க இலக்கியப் பாடல்களின் ஈர்ப்பு, திரையிசைப் பாடல்களில் எவ்வாறு மிளிர்கிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருக்குற்றாலக் குறவஞ்சி இலக்கியத்தின்நாடகக் கூறுகள் - ஓர் ஆய்வு
- திரு.சு. சந்திரகுமார்
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
புராதன காலம் முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை தமிழ்ச் சூழலில் நாடகப் பனுவல்களோ அல்லது நாடக வடிவிலான இலக்கியங்களோ தோன்றவில்லை எனும் கருத்துண்டு. ஏனெனில், தமிழர் பண்பாட்டு வெளியில் ‘ஆற்றுகைமையமாகவே’ அரங்கமரபு உருவானது. இது பன்மைத்துவம் வாய்ந்தது. ஆற்றுகையாளர்கள் கதைகளையும், செய்யுள்களையும், கருத்துவெளிப்பாடுகளையும், காதல், வீரம் சார்ந்த உணர்வுகளையும் ஆற்றுகைமையம் நின்றே வெளிப்படுத்தினர். இதற்காக ஆடல், பாடல், வாத்தியங்கள் என்பன பெரும் பங்காற்றின.இங்குஆற்றக்கூடிய உடல் முன்னிலை வகித்தது. இவ்வாற்றுகைமரபில் தொழில் முறைக்கலைஞர்கள் உருவாகிபெரும் பங்காற்றினர். இவ்வாற்றுகைகளில் கூட்டு உணர்வும், கூட்டுச் செயற்பாடும்பலம் வாய்ந்ததாக அமைந்தன. தனிமனித
தொல்காப்பியத்தில் புலம்
- ந. தனசேகர்
- மு. செந்தாமரை
- Feb. 22, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
ஒத்த கூறு அடிப்படையில் தொகுப்பதும், தொகுத்தவற்றை அதே அடிப்படையில் பகுப்பதுமானபணி, இலக்கண இலக்கியங்கள் தோன்றியகாலம் முதல் நடைபெற்றுவருகின்றது. தமிழ்மொழிக்கு அமைந்த முதன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூலில் மேற்சொன்ன கூறுகள் பதிவுபெற்றுள்ளன. அதாவது புலம் என்பதற்கான வரையறை, புல அடிப்படையிலான ஆய்வின் தொடக்கம் தொல்காப்பியத்தில் முதல் நூற்பாதொடங்கிஎழுத்ததிகாரம் முழுமைக்கான புல அடிப்படைகளை இக்கட்டுரை ஆய்ந்துள்ளது.
பெண்பாற் புலவர்களும் பெண்ணியக் கவிஞர்களும்
- பா. இரா. கவிதா
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சமூகம் என்பது ஆண், பெண் என்னும் உறவை அடிப்படையாகக் கொண்டது. ஆண்மை, பெண்மை என்பன இருகண்கள் போன்றது. பெண் துணை இல்லாத ஓர் ஆணின் வாழ்வோ, ஓர் ஆண் இணை இல்லாத ஒரு பெண்ணின் வாழ்வோ பயனற்றது என்பது ஒரு நிதர்சன உண்மை.
இலக்கியம் தொடங்கிய காலத்தில் பெண்கள் உயர்வுடையவர்களாகவும், தனித்தன்மை உடையவர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என சங்க இலக்கியப் பாடல்கள் வழி அறிய முடிகின்றன.
நவீன பெண் கவிஞர்கள் தம் கவிதைகள் மூலம் ஆணாதிக்க மனோபாவ எதிர்ப்பு இல்லாமல் பெண்களின் விழைவுகள் நோக்கங்கள் ஆகியவற்றை ஏற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கப் பாடுபடுகின்றனர்.
ஆணுடன் போட்டியிடவோ, புறந்தள்ளவோ முற்படாமல் பெண்ணின் ஆழ்மன கருத்துக்களை பெண்ணின் தேவை அதைத் தொடர்ந்த மீளாக்கம்தான் பெண் விடுதலை என்பதை மனதில் கொண்டு இக்கட்டுரைக்கு 'பெண்பாற் புலவர்களும் பெண்ணியக் கவிஞர்களும்" எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
- நா. கிருஷ்ணராஜ்
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
தமிழ் இலக்கிய உலகில் பாரதிக்கு அடுத்த இடத்தில் திகழ்பவர் பாவேந்தர் பாரதிதாசன். பாரதியைக் குருவாகப் பின்பற்றினாலும் பாரதியைவிட ஒருபடி முன்சென்று பகுத்தறிவுப் பாதையை உருவாக்கியவர் பாரதிதாசன். பாரதியின் படைப்புகளில் கடவுள் குறித்த சிந்தனைகளும் பதிவுகளும் பெரும்பாலான இடங்களில் இடம் பெற்றிருப்பதை மறுக்க முடியாது. பாவேந்தரின் ஆரம்பகால ஒரு சில கவிதைகளில் மட்டுமே கடவுள் பற்றிய கருத்துகள் இடம் பெற்றிருந்தன. காலத்தின் மாற்றத்தால் கடவுள் சிந்தனைகள் என்பதை பெயரளவில் கூட நினைக்காமல் பகுத்தறிவுச் சிந்தனைகளை கருவாகக் கொண்டு படைப்புகளைப் படைத்தவர் பாரதிதாசன். சமூகம் மேம்பாடு அடைவதற்கும் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதன் பொருட்டும் படைப்புகள் உருவாக்கப்படுகின்றன பாரதியைத் தொடர்ந்து பாரதியின் வழியே படைப்புகளைப் படைத்து வழங்கியவர் பாரதிதாசன். பக்தி என்பதைப் புறக்கணித்துவிட்டு பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொள்கையாகக் கொண்டு முன்னெடுத்துச் சென்ற பெருமை பாவேந்தருக்கு உரியதாகும். அந்த வகையில் பாரதிதாசனின் கவிதைகளில் காணலாகும் பல்வேறு சமுதாயச் சிந்தனைகளைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
பெரியபுராணம் ஒரு மீள்வாசிப்பு – அறிஞர் அண்ணாவின் படைப்புகளை முன்வைத்து
- வி. காயத்ரி பிரியதர்ஷினி
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
திராவிட இயக்கம் தமிழ் நிலப் பகுதியில் அரசியல் ,சீர்திருத்தம், இலக்கியம், கலைத்துறை எனப் பலத் தளங்களில் தனக்கெனத் தனி அடையாளத்தை வகுத்துக்கொண்டு செயல்பட்ட ஒரு இயக்கமாகும். இவ்இயக்கத்தினரின் கலைப்படைப்பு இயக்கக் கருத்தியல் பிரச்சார விளக்கமாகவும் பல வேளைகளில் கலகக்குறியீடாகவும் அமைந்திருந்தது. தங்கள் இலக்கியம் மற்றும் அரசியல் செயல்பாட்டில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் பலவற்றையும் இவ்வியக்கம் எதிர்கொண்டது என்றால் மிகையாகாது. அவ்வகையில் இவர்கள் இலக்கியத்திலும் ஒரு புதிய வகை கலை பாணியையும் உருவாக்கினர். அவற்றில் அடிப்படையாகக் கருதப்படுவது தொன்மை புராண இதிகாசங்களை மீள் வாசிப்பிற்கு உட்படுத்துவது. இம் மீள் வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்ட புராணங்கள் பலவற்றில் பெரியபுராணமும் ஒன்று. அப்புராணத்தைத் திராவிட இயக்க படைப்பாளர்களில் முக்கியத்துவம் பெறுபவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவருமான அறிஞர் அண்ணாவின் கட்டுரைகளில் எவ்வாறு மீள்வாசிப்பு செய்யப்படுகின்றது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழன் கண்ட கலைகள்
- எஸ். காமேஸ்வரி
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
கலை என்பது இயற்கை அன்னையின் பரிபூரண அருளினால் விளங்கும். கலைஞனின் உள்ளத்தில் மென்மையான உணர்வின் எதிரொலியே கலை. சுவை, இசை, காற்று, நிலம், மொழி, ஓழுக்கம், கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை நாட்டுப்புறக்கலை போன்ற கலைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டவர் நம் தமிழர்கள் என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
இலக்கியங்களில் மருத்துவம்
- ப. கனகவள்ளி
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
தமிழ் மக்களிடம் நிலவிவரும் மருத்துவ அறிவை முதன்முறையாகத் தொகுதிப் படுத்தியமையையும், முனிவர்களும், ஞானிகளும் கண்டறிந்த மருத்துவ உண்மைகளைத் தமிழ் இலக்கிங்கள் வழியாக ஆராய்ந்தறிந்து அவற்றை வெளிப்படுத்தும் முறைமையையும் வெளிப்படுத்துவனவாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
ஞானிகளும், முனிவர்களும் தமது சீடர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளும், சீடர்கள் குருபத்தியுடன் பணிசெய்து அறிவைப்பெற்றுத் தாம் பெற்ற கல்வியைச் சமூகத்திற்கு அறித்துமாறும் குருகுல பாரம்பரியத்தில் பேசப்படுவனவாகும். குருகுல பாரம்பரியத்திலே தமிழ் இலக்கியத்தையும், தமிழ் மருத்துவத்தையும் கற்ற சான்றோர்கள், தம் குருவானவர் வகுத்துறைத்தபடி கட்டுப்பாட்டுடனும் பயபக்தியுடனும் தமது பணியை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். மருத்துவர் கைக்கொண்டு ஒழுகவேண்டிய ஒழுக்கநெறிகளும் தமிழ் மருத்துவத்தில் தோன்றின என்பதும் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலே மருத்துவக்கலை எவ்வாறு வளர்ந்துவந்திருக்கிறது, சிக்தர்கள் சமூக மருத்துவத்துறையில் எத்தகைய பணியாற்றினார்கள், சோழர்காலத்திலே மருத்துவம் எவ்வாறு வளர்ந்திருந்தது , திருமந்திரத்திற் கூறப்பட்டுள்ள மருத்துவ கருத்துகள், போன்ற இலக்கியங்களில் உள்ள மருத்துவச் சிந்தனைகளையும் இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
நாட்டுப்புற இலக்கியங்களில் - “இறப்பும் தெய்வம் ஆக்கலும்’’
- டாக்டர். டி. அங்காளம்மாள்
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
சமய நம்பிக்கைகள் முன்வரலாற்றுக் காலந்தொடங்கி இன்று வரை மனித சமுதாயம் எங்கெல்லாம் வாழ்ந்துள்ளதோ அங்கெல்லாம் மனித வாழ்வியலோடு வாழ்ந்து வருகின்றன. உலகத்திலிருந்துஅறவே துண்டிக்கப்பட்டுத் தனிமையில் வாழும் பழங்குடிகளின் சமய நம்பிக்கைகள் முதல் பெரும் சமுதாயமாக வாழும் நவீன மக்களின் சமய நம்பிக்கை வரை அறிய முடிகிறது. பொதுவாக கிராம வாழ்க்கையை நாட்டுப்புற வாழ்க்கை என்று சொல்வதுண்டு. அந்த வாழ்க்கையோடு இணைந்தது தான் நாட்டுப்புறச் சமயம் ஆகும்.
தொன்மைச் சமயம் (அவை சுநடழபழைn) தோன்றிய முறையை விளக்க முற்பட்ட முதல் மானியவியல் கோட்பாடே ஆவி வழிபாடு (யுniஅளைஅ) ஆகும். சமயத்தின் தொடக்கம் ஆவிகளின்பால் ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்து தோன்றியது. சமயம் என்பதற்கு நேராக வழங்கும் சொல் இரு பொருளில் வழங்கப்படுகின்றன. ஒன்று குறிசொல்வது, அதாவது இறைவன் திரு உள்ளத்தை அறிவதற்குச் சில நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் அடையாளமாகக் கொள்வது. முற்றொன்று இறைவனோடு ஒன்றுபடுவது அல்லது மீண்டும் பிணைப்பது என்பதாகும் எனக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. (தொ.பரமசிவன், 1995: பக்109)
வேள்பாரி புதினத்தில் சங்க இலக்கிய செய்திகள்
- ம. இந்துஜா பிருந்தா
- தா. ஷமிலா
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இலக்கியங்கள் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை பல வகைகளில் அமைந்துள்ளன. இவ்வகைகளுள் ஒரு இலக்கிய வகையின் கூறுகள் மற்ற இலக்கிய வகைகளுக்குள் அமைந்து வருதலும் உண்டு. இவ்வாறு சங்க இலக்கியத்தின் கூறுகள் சமகால இலக்கியத்திற்குள் அமைந்துவந்துள்ளன என்பதற்குச் சான்றாக சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய ’வீரயுக நாயகன் வேள்பாரி’ புதினத்தைக் குறிப்பிடலாம். புதினத்தில் இடம்பெற்றுள்ள சங்க இலக்கிய செய்திகளை ஆராய்வதன்வழி, சங்க இலக்கியம் சமகால இலக்கியத்தோடு பாடுபொருளில் தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பதை உணரமுடிகிறது.
சங்ககால இசை மரபில் சமகால இசை வகைகள்
- ரெ. எழில்ராமன்
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
இசைக்கு மொழியேது, தமிழே பழம்மொழி; இளம் மொழி; பிற மொழிகளை தளைத்தெடுக்க செய்த தனி மொழி, தமிழிசையை வளர்த்டுக்க வகுத்த முதுமொழி. முச்சங்கத்திற்கு முன்பாய் கருவுற்று, முச்சங்கப் புலவர் பால் பாலூட்டப்பெற்று, பிற்காலத்தில் செம்மொழித் தாயாய் உயரியத் தன்மையைப் பெற்ற முத்தமிழ்த் தாய் தமிழ்த்தாய். தன்னிளமை குன்றா தமிழ்த் தாயோடு வாழ்ந்த தமிழரின் தனித்தன்மையால் தமிழ் மொழியின் சீரியத் தனித்திறமையால் தேன்தமிழ் தமிழிசையை உலகம் போற்றும் விந்தையை நாம் அறிகிறோம். தமிழ்மொழி ஒலிப்புறப்பாடு கொண்டு, தமிழிசை என்னும் நகர்வலத்தை சுவாசித்த உயிரணுக்கள் மரபு மாறாமல் திழிசையின் உரிய மரபைத் தத்தம் செல்வாக்கு குறையாமல் நிலைநிறுத்த தமிழிசை வகைப்பாக்கள் சங்க காலத்தில் உயிர்த்தெழுந்து சமகாலம் வரை உருவாக்கப்பெற்று நிலைப்பாடு கொண்டுள்ளதை அறியலாம். இதன் பின்னணியில் சங்க காலப் புலவர்களும், இசை பாடிய பாடினிகளும், இயலிசையாளர்களும் கையாண்ட இசை வகைகளை சங்ககாலப் பின்னணி கொண்டு சமகால இசை உருவ வகைகளை எடுத்துக்காட்டும் முகமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள்
- ப. கலைவாணி
- Feb. 10, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
பல நூற்றாண்டுக்களுக்கு முன்னரும், பின்னரும் வாழ்;ந்த மக்களின் வாழ்வியல் முறைகளை இன்றும் நாம் அறிந்துக்கொள்வதற்கு தமிழ் இலக்கிய நூல்கள் உதவுகின்றன. ஒரு படைப்பாளன் தான் வாழ்ந்த காலத்தில் மக்களிடம் கண்ட பழக்கவழக்கங்கள், பண்பாடு கலாச்சாரங்கள் இவற்றை தன் படைப்புகளின் வழியாக யாவரும் அறியும் வண்ணம் வெளிப்படுகிறான். படைப்பாளிகளின் சிந்தனையும் உலக இலக்கியப் படைப்பாளிகளின் சிந்தனையும் வேறுபாடும் மாறுபாடும் கொண்டவைகளாகவும் இருக்கும். இலக்கிய வானம் ஒன்றாயினும் திசைகள் வேறுவேறாகவே உள்ளன. இதன் மூலம் படைப்பாளிகள் தன் படைப்புகளின் வாயிலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு. சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் தொட்டு இவ்விலக்கிய வகையிலும் அதன் அடிக்கருத்தும் பாடுபொருளும் தனிமனிதனைச் சார்ந்ததாகவோ அல்லது குடும்பம், நாடு என வாழ்வியல் கூறுகளையும், சிந்தனைகளையும் கொண்டதாகவோ இருக்கின்றன. இதையே தன் படைப்புகளில் பதிவு செய்கிறார்கள். அவ்வகையில் இலக்கியங்களின் வாயிலாக மக்களின் வாழ்வியல் நெறிகளை காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பத்துப்பாட்டில் ஆடைகள்
- ரா. கார்த்திக்
- Jan. 12, 2022
- Volume: 1 - Issue: 1
-
Abstract
ஆடை மானம் காப்பது. நாகரிகம் வளராத காலத்து மனிதர் இலை, தழை, மரப்பட்டை, விலங்கின் தோல் ஆகியவற்றை உடுத்தனர். வளர்ந்த நிலையில் பருத்தி, கம்பளி, பட்டு ஆகியவற்றால் நெய்யப் பெற்ற ஆடைகளை அணிந்தனர். சங்க காலத்திலும் ஆடை பல்வகை ஆயினும் பொதுவாக இடுப்பில் ஒன்றும் மேலே ஒன்றும் என இரண்டாடையே உடுத்தினர். இதனை, உண்பது நாழி உடுப்பது இரண்டே எனப் புறநானூறு கூறும். பத்துப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஆடைகளை இக்கட்டுரை விளக்குகிறது.